பொது செய்தி

தமிழ்நாடு

வீடூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : கன மழை காரணமாக பாதுகாப்பு கருதி வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நேற்று காலை 6 மணியளவில் வினாடிக்கு 11, 777 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியில் 30 அடி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி 7 கதவுகளை திறந்து 8,458 கனஅடி உபரி நீரை வெளியேற்றினர்.காலை 8 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 11,501 கன

விக்கிரவாண்டி : கன மழை காரணமாக பாதுகாப்பு கருதி வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நேற்று காலை 6 மணியளவில் வினாடிக்கு 11, 777 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியில் 30 அடி நிரம்பியது.

அணையின் பாதுகாப்பு கருதி 7 கதவுகளை திறந்து 8,458 கனஅடி உபரி நீரை வெளியேற்றினர்.காலை 8 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 11,501 கன அடி நீர் வந்ததால், 8,586 கன அடி வெளியேற்றினர். காலை 10 மணியளவில் வினாடிக்கு 10, 380 கன அடிநீர் வந்ததால், 9,015 கன அடி வெளியேற்றினர்.பின், பகல் 12 மணியளவில் வினாடிக்கு 10,647 கன அடி நீர் வரத்து இருந்தது.அணையின் பாதுகாப்பு கருதி 9,015 கனஅடி உபரி நீரை வெளியேற்றினர். அணையில் நீர் வரத்து குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சண்முகம், பாலாஜி, கார்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X