பொது செய்தி

இந்தியா

பாடத்திட்டம் முடியாததால் பொதுத்தேர்வு தாமதம்?

Added : நவ 22, 2021
Share
Advertisement
பெங்களூரு : எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கான நாட்கள் பற்றாக்குறையால் நடப்பாண்டிலும் பொதுத்தேர்வு தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக கொரோனா பாதிப்பால் பொதுத்தேர்வு வகுப்புகளில் பாடத்திட்டங்களை முடிப்பதற்கும், மாணவர்களை தயார்படுத்துவதற்கும் கால தாமதமானது.இதனால் பொதுத்தேர்வு ஜூலையில் நடத்தப்பட்டது.

பெங்களூரு : எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கான நாட்கள் பற்றாக்குறையால் நடப்பாண்டிலும் பொதுத்தேர்வு தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக கொரோனா பாதிப்பால் பொதுத்தேர்வு வகுப்புகளில் பாடத்திட்டங்களை முடிப்பதற்கும், மாணவர்களை தயார்படுத்துவதற்கும் கால தாமதமானது.இதனால் பொதுத்தேர்வு ஜூலையில் நடத்தப்பட்டது. வழக்கமான பொதுத்தேர்வுகள், மார்ச், ஏப்ரலில் நடக்கிறது.

கொரோனா பாதிப்பால் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு பாடத்துக்கும் 60 பாடவேளைகள் இருக்க வேண்டும். ஒரு பாடப்பிரிவை முடிப்பதற்கு தலா 240 நாட்கள் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் நடப்பாண்டில் 180 நாட்கள் மட்டுமே உள்ளது.ஆசிரியர்களை பாடம் நடத்துவதற்கு விரைவு படுத்தினாலும், மாணவர்கள் அந்த அளவுக்கு விரைவாக பாடங்களை படிக்க முடியாது.பாடம்

நடத்துவதற்கான நாட்கள் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில், மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதற்கும் நேரமில்லை.இதனால் கடந்த இரண்டாண்டுகளை போல் தேர்வு தாமதமாக நடத்தப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு கூறினர்.கர்நாடக உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் கூறியதாவது:குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், 20 சதவீத பாடத்திட்டத்தை குறைப்பதற்கு, மாநில அரசுக்கு கடிதம் வைத்திருக்கிறோம். இதனால், அடுத்த கல்வியாண்டிலாவது குறிப்பிட்ட நேரத்தில் வகுப்புகள் துவக்கப்படும். நடப்பாண்டில் தேர்வு தாமதமாகும் பட்சத்தில் அடுத்த கல்வியாண்டையும் பாதிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X