பொது செய்தி

இந்தியா

எட்டு ஆண்டுகளில் 2,062 தற்கொலை தடுப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடக மாநில ஆலோசனை உதவி எண் மூலமாக, கடந்த எட்டு ஆண்டுகளில் 2,062 தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன.கர்நாடக மாநில அரசின் சார்பில், 2013ல் 'ஆரோக்கிய சகாயவாணி' செயலி செயல்படுத்தப்பட்டது. 104 உதவி எண்ணுக்கு அழைத்து, உடல்நலம் மற்றும் மனநலம் பிரச்னைகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு, இந்த உதவி எண் வழங்கப்பட்டது.கடந்த 8 ஆண்டுகளாக இந்த செயலி மூலம் பயன்பெற்றவர்கள், பதிவான

பெங்களூரு : கர்நாடக மாநில ஆலோசனை உதவி எண் மூலமாக, கடந்த எட்டு ஆண்டுகளில் 2,062 தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன.கர்நாடக மாநில அரசின் சார்பில், 2013ல் 'ஆரோக்கிய சகாயவாணி' செயலி செயல்படுத்தப்பட்டது.

104 உதவி எண்ணுக்கு அழைத்து, உடல்நலம் மற்றும் மனநலம் பிரச்னைகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு, இந்த உதவி எண் வழங்கப்பட்டது.கடந்த 8 ஆண்டுகளாக இந்த செயலி மூலம் பயன்பெற்றவர்கள், பதிவான அழைப்புகள் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.இதில் 2013 முதல் 2021 வரை, 42.6 லட்சம் அழைப்புகள் பதிவாகியுள்ளன.

நிபுணர்களின் உளவியல் ஆலோசனை மூலமாக 2,062 தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நுாற்றுக்கு இரண்டு பேர் வீதம், மனதளவில் பாதிக்கப்பட்டோர் தான் உதவி எண்ணுக்கு அழைக்கின்றனர்.கடந்த எட்டு ஆண்டுகளில், 7,000 பேர் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக அழைத்தனர். 2013ல் 13 தற்கொலைகள் தடுக்கப்பட்டன.

ஆனால், 2019ல் தற்கொலை தடுப்பின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது; 2020ல் 173ஆகவும், 2021ல் 120 ஆகவும் குறைந்துள்ளது.இந்த செயலி பதிவு படி, பெரும்பான்மையான அழைப்புகள் 15 - 24 வயதுக்கு உட்பட்டோராக இருந்துள்ளனர்.உளவியல் ஆலோசகர்கள், உதவி கேட்போர் பிரச்னைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குவதால் பலரும் பயன்பெற்றுள்ளனர்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X