மாணவருக்கு தடுப்பூசி பெற்றோர் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாணவருக்கு தடுப்பூசி பெற்றோர் வலியுறுத்தல்

Added : நவ 22, 2021
Share
பெங்களூரு : பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்த வேண்டுமென பெற்றோர் மாநில அரசை வலியுறுத்துகின்றனர்.கர்நாடகாவில் பள்ளிகள் முழுமையாக துவக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அவசியம் என பெற்றோர் விரும்புகின்றனர்.மாணவர்களுக்கு குறிப்பிட்ட வயது அடிப்படையில், நோய் தொற்றுக்கான தடுப்பூசி மருத்துவமனைகளில் போடப்படுகிறது.கொரோனா

பெங்களூரு : பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்த வேண்டுமென பெற்றோர் மாநில அரசை வலியுறுத்துகின்றனர்.கர்நாடகாவில் பள்ளிகள் முழுமையாக துவக்கப்பட்டுள்ளதால்

மாணவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அவசியம் என பெற்றோர் விரும்புகின்றனர்.மாணவர்களுக்கு குறிப்பிட்ட வயது அடிப்படையில், நோய் தொற்றுக்கான தடுப்பூசி மருத்துவமனைகளில் போடப்படுகிறது.கொரோனா பாதிப்பு, மாணவர்களையும் தாக்குவதால் மூச்சு பிரச்னை உள்ளோருக்கு ஆண்டு தோறும் தடுப்பூசி செலுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தற்போது மாணவர்கள் பள்ளிக்கு செல்வதால் எளிதில் தொற்று நோய் ஏற்படும் சூழல் உள்ளது.இதனால், மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துமாறு பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுக்கான தடுப்பூசி கட்டணம் செலுத்த வேண்டுமென்பதால், பல மாணவர்களுக்கு சாத்தியமில்லாமல் உள்ளது.குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியதாவது:

கொரோனா மற்றும் பருவகால தொற்று காய்ச்சல் இரண்டுக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் ஆரம்பகட்டத்தில் உள்ளது.பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்துவது அவசியம். குறிப்பாக மூச்சு பிரச்னை உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X