பொது செய்தி

இந்தியா

ஹம்சலேகா மீது அளித்த புகார் வாபஸ்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பெங்களூரு : உடுப்பி பெஜாவர் மடாதிபதி குறித்து அவமதிப்பாக பேசிய கூறி, இசையமைப்பாளர் ஹம்சலேகா மீது கிருஷ்ணராஜ் என்பவர் அளித்திருந்த புகார், திரும்ப பெறப்பட்டது.கன்னட திரையுலகின் பிரபல இசையமைப்பாளராக விளங்கும் ஹம்சலேகா, சில நாட்களுக்கு முன் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.அதில் பேசிய அவர், 'பெஜாவர் மடாதிபதி, தலித்களின் வீட்டுக்கு சென்று அமர்ந்து

பெங்களூரு : உடுப்பி பெஜாவர் மடாதிபதி குறித்து அவமதிப்பாக பேசிய கூறி, இசையமைப்பாளர் ஹம்சலேகா மீது கிருஷ்ணராஜ் என்பவர் அளித்திருந்த புகார், திரும்ப பெறப்பட்டது.கன்னட திரையுலகின் பிரபல இசையமைப்பாளராக விளங்கும் ஹம்சலேகா, சில நாட்களுக்கு முன் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.அதில் பேசிய அவர்,

'பெஜாவர் மடாதிபதி, தலித்களின் வீட்டுக்கு சென்று அமர்ந்து வந்தார். ஆனால் தலித்கள் கோழி இறைச்சி கொடுத்தால் தின்பாரா; ஆட்டு ரத்தத்தை வறுத்து கொடுத்தால் தின்பாரா?'தலித்களின் வீட்டுக்கு செல்வது, பெரிய விஷயமல்ல. அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து சென்று, அவர்கள் சாப்பிட்ட தட்டு, தம்ளரை கழுவுவதே பெரிய விஷயம்' என, கூறியிருந்தார்.

இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் பலரும் கண்டித்தனர். அதன்பின் அவர் தன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார். ஹம்சலேகா மீது பிராமணர் சங்கத்தினர் பசவனகுடி போலீஸ் நிலையத்தில், புகார் செய்திருந்தனர். இதே போன்று கிருஷ்ணராஜ் என்பவரும் புகார் செய்திருந்தார்.தற்போது பிராமணர் சங்கத்தினர் புகாரை ஆதரிப்பதாக கூறி, தன் புகாரை கிருஷ்ண ராஜ் திரும்பப்பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X