லடாக் : நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டை கொண்டாடும் விதமாக ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில் 76 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் ஓராண்டுக்கு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.மத்திய அரசின் அனைத்து துறையினரும் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். ராணுவத்தினரும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஜம்மு - காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள ஹான்லே பள்ளத்தாக்கில் 15,000 அடி உயரத்தில், 76 அடி உயர கம்பம் அமைத்து, அதில் தேசியக் கொடியை ராணுவத்தினர் ஏற்றியுள்ளனர். இந்தக் கொடிக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.