பொது செய்தி

இந்தியா

முன்னெச்சரிக்கை! கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரசால் கர்நாடகாவில்...எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு; சிகிச்சைக்கு ஏற்பாடு

Added : நவ 22, 2021
Share
Advertisement
பெங்களூரு : கேரளாவில், 'நோரோ வைரஸ்' எனப்படும் புதிய வைரஸ் பரவி வருவதால் கர்நாடகாவின் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாம்ராஜ் நகரில் 24 மணி நேர சிகிச்சைக்கு மாவட்ட சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் பல மாநிலங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளது.ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் இன்னும்

பெங்களூரு : கேரளாவில், 'நோரோ வைரஸ்' எனப்படும் புதிய வைரஸ் பரவி வருவதால் கர்நாடகாவின் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாம்ராஜ் நகரில் 24 மணி நேர சிகிச்சைக்கு மாவட்ட சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது

.நாடு முழுவதும் பல மாநிலங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளது.ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் இன்னும் பாதிப்பு குறையவில்லை. தினசரி பாதிப்பு 7,000க்கு குறையாமல், இந்திய அளவில் முதலிடத்தில் அந்த மாநிலம் உள்ளது.13 மாணவர்கள் பாதிப்புஇதற்கிடையே, கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் வைத்திரி அருகேயுள்ள பூக்கோடு எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் கால்நடை கல்லுாரி மாணவர்கள் 13 பேர், நோரோ வைரஸ் எனப்படும் புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும். சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் காரணமாகவும் பரவுகிறது.இதையடுத்து, அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், 'நோரோ வைரஸ் குறித்து பயம் வேண்டாம். அதே நேரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உரிய நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை மூலம் விரைவில் குணப்படுத்த முடியும்' என, குறிப்பிட்டுள்ளார்.

தீவிர முன்னெச்சரிக்கை

இதனால், கேரளாவை ஒட்டியுள்ள கர்நாடக மாநில எல்லைகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சாம்ராஜ்நகர் மாவட்டம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேர சிகிச்சைக்கு மாவட்ட சுகாதார துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.பண்டிப்பூர் மூலஹோளே, குண்டுலுபேட் சோதனைச்சாவடிகளில் பயணியர் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

குண்டுலுபேட் நகரம், மார்க்கெட் பகுதிகளில் துாய்மை குறித்து விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இது போல, கேரள எல்லையில் உள்ள குடகு, தட்சிண கன்னடா மாவட்ட சோதனைச்சாவடிகளிலும் தீவிர பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா மற்றும் நிபா வைரசை அடுத்து கேரளாவில் இருந்து புதிய வைரஸ் பரவி வருவது கர்நாடகா மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

\அறிகுறிகள் என்னென்ன?

நோரோ வைரஸ் இரைப்பை குடல் நோயை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டோரின் வயிறு மற்றும் குடலின் உட்புறத்தின் வீக்கம் காணப்படும். கடும் வாந்தி, வயிற்றுப்போக்கு இருக்கும்.ஆரோக்கியமானவர்களை பெரிதாக பாதிக்காது. ஆனால் குழந்தைகள், முதியவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.வைரஸ் தொற்றுக்கு உள்ளானோருடன் நெருங்கிய தொடர்பு அல்லது அசுத்தமான மேற்பரப்புகளை தொடுவதன் மூலம் எளிதில் பரவுகிறது.வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவரால் தயாரிக்கப்பட்ட அல்லது கையாளப்பட்ட உணவை சாப்பிடுவதன் மூலமும், பாதிக்கப்பட்ட நபரின் மலம் மற்றும் வாந்தி மூலமும் பரவும்.இந்நோயால் பாதிக்கப்பட்டோர் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X