பெஸ்காம் நிறுவனத்துக்கு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பெஸ்காம்' நிறுவனத்துக்கு

Added : நவ 22, 2021
Share
பெங்களூரு : கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கும், 'பெஸ்காம்' நிறுவனத்துக்கு அரசின் பல்வேறு துறைகள் 3,752 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. இதில் தெரு விளக்குகள் எரியவும், பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் மின் கட்டணமே 3,310 கோடி ரூபாய் உள்ளது.பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர், ராம்நகர், துமகூரு, சித்ரதுர்கா,

பெங்களூரு : கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கும், 'பெஸ்காம்' நிறுவனத்துக்கு அரசின் பல்வேறு துறைகள் 3,752 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளன.

இதில் தெரு விளக்குகள் எரியவும், பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் மின் கட்டணமே 3,310 கோடி ரூபாய் உள்ளது.பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர், ராம்நகர், துமகூரு, சித்ரதுர்கா, தாவணகரே மாவட்டங்களுக்கு, 'பெஸ்காம்' எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவனத்துக்கு மின்சாரம் வினியோகிக்கிறது.

இம்மாவட்டங்களின் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், 2,444 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளன.செப்டம்பர் இறுதி வரை, குடிநீர், தெருவிளக்குகளுக்கு வினியோகிக்கப்பட்ட மின்சாரத்துக்கு, 1,989.62 கோடி ரூபாய் அசலும், 454.40 வட்டியும் செலுத்த வேண்டி உள்ளது.கடும் நெருக்கடிஇது போன்று அரசின் பல்வேறு துறைகளும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மின் பாக்கி வைத்துள்ளதால், பெஸ்காம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

மின்சார திட்டங்களை செயல்படுத்துவதிலும் பின்னடைவு ஏற்படுகிறது.இது தொடர்பாக, பெஸ்காம் அதிகாரிகள் கூறியதாவது:கிராம பஞ்சாயத்துகள், 2,444 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. நகர அபிவிருத்தித்துறைக்கு உட்பட்ட, பெங்களூரு குடிநீர் வாரியம், மாநகராட்சிகள், நகராட்சி, டவுன் சபைகள், பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கவும், தெரு விளக்குகள் எரியவும், பெஸ்காம் வினியோகித்த மின்சாரத்துக்கு, 1,157 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டிஉள்ளது.

குடிசை மாற்று வாரியம் 15.91 கோடி ரூபாய்; உள்துறை 1.72 கோடி; வருவாய்த்துறை 1.49 கோடி; கல்வித்துறை 3.55 கோடி; வர்த்தகம், தொழிற்துறை 40.55 கோடி; கைத்தறி, பட்டுத்துறை 12.94 கோடி.நீர்ப்பாசனத்துறை 48.64 கோடி; சிறிய நீர்ப்பாசனத்துறை 5.73 கோடி; சுகாதாரத்துறை 4.73 கோடி உட்பட அரசின் பல்வேறு துறைகள் அசல், வட்டியுடன் 3,752 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.தங்கவயல் கோல்டு மைன்ஸ்மத்திய அரசு சார்ந்த டெலிபோன் எக்சேஞ்ச் அலுவலகங்கள், 10.92 கோடி ரூபாய்; தங்கவயல் கோல்டு மைன்ஸ், 25.58 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. மின் கட்டண பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மின் இணைப்பை துண்டிப்பதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். சர்வ சாதாரணம்கலபுரகி, பீதர், ராய்ச்சூர், பல்லாரி, விஜயநகர், யாத்கிர், கொப்பல் என ஏழு மாவட்டங்களுக்கு, மின்சாரம் வினியோகிக்கும் 'ஜெஸ்காம்' எனும் குல்பர்கா மின் வினியோகத்துக்கு, அரசின் பல துறைகள் 1,800 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளன.மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு, மாண்டியா, ஹாசனுக்கு மின்சாரம் வினியோகிக்கும் 'செஸ்காம்' எனும் சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனத்துக்கு, நகர அபிவிருத்தித்துறை 343.40 கோடி ரூபாய், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.மற்ற மின் வினியோக நிறுவனத்துடன் ஒப்பிட்டால், மெஸ்காம் எனும் மங்களூரு மின் வினியோக நிறுவனத்துக்கு வர வேண்டிய மின் கட்டண பாக்கி குறைவு. கிராம பஞ்சாயத்துகள், நகர உள்ளாட்சிகள் 80 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X