பொது செய்தி

தமிழ்நாடு

தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி; சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிப்பதில் தொய்வு

Added : நவ 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளதை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் 30 சட்டம், ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், தலா நான்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன்கள், மகளிர் மற்றும் கலால் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள் அனைத்தும் எஸ்.பி.,யின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது.சட்டம்,


விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளதை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

.விழுப்புரம் மாவட்டத்தில் 30 சட்டம், ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், தலா நான்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன்கள், மகளிர் மற்றும் கலால் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள் அனைத்தும் எஸ்.பி.,யின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது.சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்க எஸ்.பி., அலுவலகத்தில் தனிப்பிரிவு அலுவலகம் செயல்படுகின்றது.

இங்கு, ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியில் உள்ளனர்.மாவட்டத்தில் உள்ள தனிப்பிரிவு போலீசார் மற்றும் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் தகவல் தெரிவிப்பர். அதை, எஸ்.பி.,-டி.ஐ.ஜி., மற்றும் காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தெரிவிப்பார்.

இங்கு இன்ஸ்பெக்டராக இருந்த குருமூர்த்தி, இரண்டு மாதங்களுக்கு முன் கடலுார் மாவட்டம் புதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் கடந்த இரண்டு மாதங்களாக காலியாக உள்ளது.இதனால், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பதவியை நிரப்ப உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X