பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் குடிநீர் 'சப்ளை': விழுப்புரம் நகராட்சி ஏற்பாடு

Added : நவ 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் நகர பகுதிகளில் குடிநீர் பிரச்னை நிலவுவதால், நகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் நகர பகுதிகளில் 42 வார்டுகள் உள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் அன்றாட தேவையை போக்கும் வகையில், நகராட்சி மூலம் பைப்-லைன்கள் வழியாக அந்தந்த பகுதிகளில் குடிநீர் சப்ளை

விழுப்புரம் : விழுப்புரம் நகர பகுதிகளில் குடிநீர் பிரச்னை நிலவுவதால், நகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் நகர பகுதிகளில் 42 வார்டுகள் உள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் அன்றாட தேவையை போக்கும் வகையில், நகராட்சி மூலம் பைப்-லைன்கள் வழியாக அந்தந்த பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.இந்த குடிநீர், எல்லீஸ்சத்திரம் பகுதியில் உள்ள மோட்டார் மூலம் நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இதனால், எல்லீஸ்சத்திரம் மோட்டார் அறைக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், குடிநீர் மோட்டாரை இயக்குவது தடைபபட்டுள்ளது.இந்த சூழலில், கடந்த இரு தினங்களாக, விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள நகராட்சி பைப்களில் குடிதண்ணீர் பழுப்பு நிறத்தில் கலங்களாக வருகிறது.

இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'எல்லீஸ்சத்திரம் பகுதியில் உள்ள நகராட்சி குடிநீர் மோட்டார் அறையில் தண்ணீர் குறைந்தபின் தான், இப்பிரச்னை சரிசெய்யப்படும்.அது வரை, குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் நகராட்சி மூலம் வாகனங்களில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீரை பொதுமக்கள் சுடவைத்து குடிக்க வேண்டும். தண்ணீர் தேவைப்படும் பகுதி மக்கள், நகராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்து, குடிநீர் வாகனம் மூலம் தண்ணீர் தேவையை போக்கி கொள்ளலாம்' என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X