பொது செய்தி

தமிழ்நாடு

ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் உடல் நேற்று மாலை நல்லடக்கம்

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
திருச்சி: ஆடு திருடர்களைால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனின் உடல் திருச்சி சோழா நகரில் நேற்று (நவ.,210 மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் மூன்று ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன், இவருக்கு வயது 56. . இவருடைய சொந்த ஊர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தைவெளி கிராமம். இவருக்கு கீதா (48)

திருச்சி: ஆடு திருடர்களைால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனின் உடல் திருச்சி சோழா நகரில் நேற்று (நவ.,210 மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.



latest tamil news


திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் மூன்று ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன், இவருக்கு வயது 56. . இவருடைய சொந்த ஊர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தைவெளி கிராமம். இவருக்கு கீதா (48) மனைவியும் மற்றும் அண்ணா பல்கலையில் எம்.இ படிக்கும் குகன் (24) என்ற மகனும் உள்ளனர்.

சம்பவத்தன்று நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் பூமிநாதன் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சிலர் பைக்குகளில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றுள்ளனர். ஆடு ஏற்றிச் சென்றவர்கள் வேறு வழியில் தப்பிவிட்டனர். வேறு சிலரை பூமிநாதன் சுற்றிவளைத்தார். அப்போது மற்ற போலீஸ்காரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று நினைத்த திருடர்கள் அவரை அரிவாளால் சரமாாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

இதையடுத்து சம்பவ இடத்திலேயே பூமிநாதன் உயிரிழந்தார். அவ்விடத்திற்கு வந்த போலீசார் சேகர் மற்றும் சித்திரவேல் ஆகியோர் இவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திருச்சி டி.ஐ.ஜி., சரவண சுந்தர், திருச்சி எஸ்.பி., சுஜித்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.சம்பவம் குறித்து, கீரனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்


latest tamil news


நல்லடக்கம்
கொலையாளிகளை பிடிக்க, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூமிநாதன் உடல், திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, ஏ.டி.ஜி.பி., செந்தாமரைக் கண்ணன் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.நேற்று (நவ.,21) மாலை அவரது உடல், திருச்சி சோழமா நகரில் போலீசாரின் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
22-நவ-202120:24:42 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN யாரோ.......அவர்யாரோ......என்ன பேரோ..... யாரே அறிவார் பராபரமே.... யாரே தான் அறிவார் ? -சும்மா ஆடு திருட்டெல்லாம் ஒரு சின்ன தூண்டில் தான்..............இலக்கு வேற என்னவோ போல......புரிஞ்சுக்கணும்......
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
22-நவ-202120:20:04 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN yaa
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-நவ-202108:46:40 IST Report Abuse
duruvasar சாக்கடை அடைப்புக்கு போராட்டம் செய்த சாக்கடைகள், உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்க்கு உசுப்பேத்தும் ஊடகவியலாளர்கள், நெறியே இல்லாத நெறியாளர்கள், சவுக்கு சுற்றும் சண்டாளர்கள் இவர்கள் யாருமே வாயை திறக்கமாட்டார்கள். இவனுங்களுக்கு பெயர் தன்மான தமிழர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X