தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உதவிகள் கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா உறுதி

Added : நவ 22, 2021
Share
Advertisement
கடலுார் : 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்' என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலுார் அடுத்த மருதாடு, வெள்ளப்பாக்கம், இரண்டாயிர விளாகம், அழகியநத்தம், செல்லங்குப்பம் சுனாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தரைப்பாலங்களை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,
 வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உதவிகள்  கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா உறுதி

கடலுார் : 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்' என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலுார் அடுத்த மருதாடு, வெள்ளப்பாக்கம், இரண்டாயிர விளாகம், அழகியநத்தம்,

செல்லங்குப்பம் சுனாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தரைப்பாலங்களை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சென்னை மாநகராட்சி மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலருமான அன்சுல் மிஸ்ரா, கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ., நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மருதாடு பகுதியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாமையும்,

தேவனாம்பட்டிணம் முகத்துவாரம் பகுதியையும் ஆய்வு செய்தனர்.பின், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா அளித்த பேட்டி: தென் பெண்ணையாற்றில் வெள்ளம் வந்ததால் கடலுார் மாவட்டத்தில் சில கிராமங்கள், கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட சில வார்டுகள் பாதிக்கப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில், வெள்ள நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.கடந்த 19ம் தேதி, வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டது.

மறுநாள் 20ம் தேதி, வெள்ள நீர் வடியத் துவங்கியதால் வீடுகளுக்கு மக்கள் திரும்பினர். வீடு திரும்பியவர்களால் உணவு சமைக்க முடியாத நிலை உள்ளது. இவர்களுக்கும், மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித் சிங், பவன்குமார் கிரியப்பனவர், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன், மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X