பொது செய்தி

தமிழ்நாடு

மரக்காணம் சேர்மன் பதவி யாருக்கு?; இன்று மறைமுக தேர்தல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
மரக்காணம் : பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் 26 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் தி.மு.க., - 17, அ.தி.மு.க.,- 3, பா.ம.க., - 2, வி.சி., - 1, சுயேச்சை - 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சேர்மன் பதவிக்கு தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்


மரக்காணம் : பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் 26 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் தி.மு.க., - 17, அ.தி.மு.க.,- 3, பா.ம.க., - 2, வி.சி., - 1, சுயேச்சை - 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சேர்மன் பதவிக்கு தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தயாளன் போட்டியிட்டனர். அமைச்சர் மஸ்தான் தயாளனை பரிந்துரை செய்தார்.

கடந்த மாதம் 22ம் தேதி நடக்க இருந்த சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு கண்ணன் ஆதரவு கவுன்சிலர்களுடன் வேனில் வந்தார். தயாளன் தரப்பினர் கண்ணன் தரப்பினரை ஓட்டு போட வரவிடாமல் தடுத்து, தகராறு செய்தனர். இதனால் அதிகாரிகள் தேர்தலை ஒத்திவைத்தனர்.இதற்கிடையே, கண்ணன் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து கண்ணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.

உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் எந்த மட்டத்திலும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பதை, மாநில தேர்தல் ஆணையம், போலீசார் உறுதி செய்ய வேண்டும்.மறைமுக தேர்தலுக்கான தேதி மற்றும் தேர்தல் நடை முறையை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இதையெடுத்து மாநில தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் நடத்துவதாக கூறியுள்ளது.அமைச்சர் மஸ்தான் மரக்காணத்தில் முகாமிட்டு தயாளனுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கண்ணன் தரப்பினர் ஐகோர்ட் உத்தரவுபடி தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டுமென மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கவுன்சிலர்கள் கவனிப்புஇதற்கிடையே, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தயாளன், முன்னாள் மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆகியோர் தங்கள் ஆதரவு கவுன்சிலர்களை மறைமுக இடத்தில் வைத்து கவனித்து வருகின்றனர். பெண் கவுன்சிலர் கடத்தலா?ஏந்துார் தி.மு.க., கவுன்சிலர் கஸ்துாரியை நேற்று முன்தினம் கண்ணன் தரப்பினர் கடத்தி சென்றதாக அவரது கணவர் சந்திரசேகர் நேற்று முன்தினம்

இரவு பிரம்மதேசம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். கவுன்சிலர் கஸ்துாரி எஸ்.பி., அலுவலகத்திற்கு ஆன்லைனில் நேற்று புகார் அனுப்பியுள்ளார். அதில், தன்னை ஓட்டு கேட்டு சிலர் தொந்தரவு செய்ததால், என் கணவர் அனுமதியோடு உறவினர் வீட்டிற்கு வந்துள்ளேன். ஆனால், என் கணவரை கட்டாயப்படுத்தி என்னை கடத்தியதாக புகார் கொடுக்க வைத்துள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, கூறியுள்ளார்.இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X