தமிழ்நாடு

திருப்பாச்சனூர் தரைப்பாலம் சேதம்; 3 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே, திருப்பாச்சனுார் தரைப்பாலம் உடைந்து சேதமடைந்ததால், மூன்று கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மலட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனுார் தரைப்பாலத்தில் மீது கடந்த இரண்டு நாட்களாக


விழுப்புரம் : விழுப்புரம் அருகே, திருப்பாச்சனுார் தரைப்பாலம் உடைந்து சேதமடைந்ததால், மூன்று கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், மலட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனுார் தரைப்பாலத்தில் மீது கடந்த இரண்டு நாட்களாக சென்றது. இந்நிலையில், பழமையான இந்த தரைப்பாலம் நேற்று காலை திடீரென உடைந்து சேதமடைந்தது.இதன் காரணமாக, திருப்பாச்சனுார், தளவானுார், தென்குச்சிப்பாளையம் ஆகிய மூன்று கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான தங்களின் கிராமங்களைவிட்டு வெளியில் வர முடியாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து வசதியில்லாததால், மூன்று கிராமங்களும் தனித்தீவு போன்று காட்சியளிக்கின்றன.சேதமடைந்த தரைப்பாலத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திருப்பாச்சனுார் உடைந்த தரைப்பாலம் அருகில் தற்போது புதியதாக கட்டப்படும் மேம்பால கட்டுமான பணிகளை விரைவுப்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X