பொது செய்தி

தமிழ்நாடு

பாகூரில் வெள்ளத்தில் சிக்கிய வீடுகள் இடிந்து விழும் அபாயம்; விளைநிலத்தில் மணல் படிந்ததால் விவசாயிகள் கவலை.

Added : நவ 22, 2021
Share
Advertisement
பாகூர், : சோரியாங்குப்பம் கிராமத்தில் புகுந்த தென்பெண்ணையாற்று வெள்ளத்தில் சிக்கி சேதமான வீடுகள் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.இந்நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணையாற்றில், 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி


பாகூர், : சோரியாங்குப்பம் கிராமத்தில் புகுந்த தென்பெண்ணையாற்று வெள்ளத்தில் சிக்கி சேதமான வீடுகள் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணையாற்றில், 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் பெருக்கெடுத்து வரலாறு காணாத அளவிற்கு பெரு வெள்ளம் ஏற்பட்டது.கடலுார் மாவட்டம் அழகிய நத்தம் மேம்பாலம் பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் இரண்டாயிரவிளாகம் கிராமம் வழியாக புகுந்து இருளஞ்சந்தை, பாகூரை புரட்டி போட்டது.கரையோர கிராமங்களான கொம்மந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம் பகுதியில் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சோரியாங்குப்பம் நாவம்மாள் கோவில் வீதியில் கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லாமல், தவித்து வருகின்றனர்.குருவிநத்தம் சித்தேரி சாலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு,

மின் கம்பங்களும் சாய்ந்து கிடக்கின்றன.இருளஞ்சந்தை கிராமத்தில் வெள்ளம் வடிந்த நிலையில், வீடுகளில் மிச்சம் மீதி இருந்த அரிசி, பருப்பு மற்றும் பொருட்களை சாலையில் உலர்த்தி வருகின்றனர்.பாகூரில் கிருஷ்ணா நகர், மகா கணபதி நகர் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல் நெல் வயல்களில் படிந்துள்ளது. இதனால், தண்ணீர் வடிந்தாலும் நெற்பயிர்கள் மீண்டும் வளருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X