பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' பணியாளர்கள் 2ம் தேதி உண்ணாவிரதம் 

Added : நவ 22, 2021
Share
Advertisement
கடலுார் : 'தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில், வரும் 2ம் தேதி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என, அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார். கடலுாரில் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில மாநாட்டில் பொது கோரிக்கைகள் மட்டுமின்றி துறை வாரியான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்

கடலுார் : 'தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில், வரும் 2ம் தேதி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என, அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.

கடலுாரில் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில மாநாட்டில் பொது கோரிக்கைகள் மட்டுமின்றி துறை வாரியான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சரவணன், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிலை குறித்து பேசினார். அவரை, கடலுார் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் 'சஸ்பெண்ட்' செய்ததை கண்டிக்கிறோம். 'சஸ்பெண்ட்' உத்தரவை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 3 மையங்களில் வரும் 2ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. மறுநாள் 3ம் தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் 9 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் சரவணன், மாவட்டத் தலைவர் அல்லிமுத்து, செயலாளர் பாலமுருகன், அரசுப்பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, ரேஷன்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் தேவராஜ், கந்தன், முத்துபாபு, தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X