தமிழ்நாடு

ராமநாதபுரம் அரசு நர்சிங் பயிற்சி பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் அவதி

Added : ஆக 05, 2011
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அரசு நர்சிங் பயிற்சி பள்ளி இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவிகள் திருட்டு பயத்தில் உள்ளனர். மழை நேரத்தில் ஒழுகும் தண்ணீரால், இரவில் தூக்கம் கெட்டு படிப்பு பாழாகிறது. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அரசு நர்சிங் பயிற்சி பள்ளி இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவிகள் திருட்டு பயத்தில் உள்ளனர். மழை நேரத்தில் ஒழுகும் தண்ணீரால், இரவில் தூக்கம் கெட்டு படிப்பு பாழாகிறது. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 210 மாணவிகள் பயின்று வருகின்றனர். விடுதி சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பம்ப்செட் அடிக்கடி பழுதாவதால், தண்ணீர் தட்டுப்பாடால் மாணவிகள் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு அறையிலும் 20 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொருட்கள் வைக்க கூட இடமின்றி தவிக்கின்றனர். மழை நேரத்தில் விரிசலடைந்த சுவர் வழியாக வரும் வரும் மழைநீர் அறைகளில் தேங்கி நிற்கிறது. இரவு முழுவதும் தூக்கமின்றி அடுத்த நாள் படிப்பு, பயிற்சியில் கவனம் செலுத்த முடியவில்லை.

நான்கு கழிப்பறைகளில் செயல்படும் ஒன்றை அனைவரும் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். குடிநீர் சப்ளை கிடையாது. வாரம் ஒருநாள் லாரியில் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதை குடத்தில் சேமித்து வாரம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். வார்டன் இல்லாததால், இரவில் திருடர்கள் பயத்தில் உள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலசந்தர் கூறியதாவது: நர்சிங் பயிற்சி பள்ளி மோசமாக உள்ளது குறித்தும், மழைக்காலத்துக்கு முன் அதை சீரமைக்க நிதி ஒதுக்க கோரி துறை தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். நிதி ஒதுக்கிய பின் கட்டஅவர்கள் நிதி ஒதுக்கும் பட்சத்தில், போர்க்கால அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X