பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவபுரத்தில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : சமத்துவபுரம் மற்றும் புதிய மருத்துவ கல்லுாரி பகுதியில் தண்ணீர் தேங்கியதையடுத்து, ஒன்றிய சேர்மன் பார்வையிட்டு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் உள்ள சமத்துவபுரத்தில் பல்வேறு குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டடத்திற்கு எதிரே புதிய மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டடமும்

கள்ளக்குறிச்சி : சமத்துவபுரம் மற்றும் புதிய மருத்துவ கல்லுாரி பகுதியில் தண்ணீர் தேங்கியதையடுத்து, ஒன்றிய சேர்மன் பார்வையிட்டு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் உள்ள சமத்துவபுரத்தில் பல்வேறு குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டடத்திற்கு எதிரே புதிய மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டடமும் அமைந்துள்ளது.இந்நிலையில், அரியபெருமானுார் - சிறுவங்கூர் ஏரிக்கு செல்லும் ஓடை பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், சமத்துவபுரம் குடியிருப்பு மற்றும் மருத்துவ கல்லுாரி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கியது.

இதனால், சமத்துவபுரம் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்.ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு, அப்பகுதியில் தேங்கிய தண்ணீரை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது பி.டி.ஓ.,க்கள் நடராஜன், ரங்கராஜன், தி.மு.க., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடனிருந்தனர். ஓடை ஆக்கிரமிப்பினை அகற்றி வரும் காலங்களில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X