பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை

Added : நவ 22, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட தலைமை ஆசிரியர்கள் ஆய்வு நடத்திட வேண்டும் என, டி.இ.ஓ., அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து கள்ளக்குறிச்சி டி.இ.ஓ., சிவராமன் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை.கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அனைத்து வகை தலைமைஆசிரியர்களின் உடனடி கவனத்திற்கு, தொடர் மழையின்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட தலைமை ஆசிரியர்கள் ஆய்வு நடத்திட வேண்டும் என, டி.இ.ஓ., அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி டி.இ.ஓ., சிவராமன் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை.கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அனைத்து வகை தலைமைஆசிரியர்களின் உடனடி கவனத்திற்கு, தொடர் மழையின் காரணமாக பள்ளிகளில் தண்ணீர் தேங்கி, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நிகழ்வுகள் தொடர்கின்றது.

பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவது, நோய் தொற்றினையும், நீர் ஊறி விழுகின்ற நிலையிலான கட்டடங்கள் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது.எனவே தலைமை ஆசிரியர்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பள்ளிக்குவருகை தந்து, அந்த வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கவேண்டும்.வகுப்பறைகளின் உறுதித்தன்மையை ஆராய்ந்து பயன்பாட்டிற்கு தக்க வகையாக இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளின் துாய்மை மற்றும் நீர் ஆதாரங்களின் சுகாதாரம் இவற்றை உறுதி செய்திட வேண்டும்.பள்ளியில் பயன்பாட்டில் உள்ள அனைத்து மின் சாதனங்களின் இணைப்புகள் சரியாக உள்ளதையும் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளியின் கற்றல் சூழல் குறித்த இடர்பாடுகளை மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டுதெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளும் ஆரோக்யமாக, பாதுகாப்பாக செயல்படுவதை பள்ளிக்கு உடனடியாகச் சென்றுபார்வையிட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X