பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி 28ம் தேதி... திறப்பு ; முதல்வர் வருகையையொட்டி பணிகள் தீவிரம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமான சில நாட்களிலேயே, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரியும் அறிவிக்கப்பட்டது.இதற்காக சிறுவங்கூரில் 20 ஏக்கர் பரப்பளவில், ரூ.382 கோடியில் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.இதில், மருத்துவமனை ஏழு தளங்களை கொண்டு, 700 படுக்கை வசதிகளுடன்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமான சில நாட்களிலேயே, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரியும் அறிவிக்கப்பட்டது.

இதற்காக சிறுவங்கூரில் 20 ஏக்கர் பரப்பளவில், ரூ.382 கோடியில் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.இதில், மருத்துவமனை ஏழு தளங்களை கொண்டு, 700 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, விரிவுரையாளர்கள் பிரிவு, ரத்தவங்கி, மருத்துவக் கிடங்கு, பல் மருத்துவமனை பிரிவு, காது- மூக்கு- தொண்டை சிகிச்சை பிரிவு, ஆய்வகம் ஆகியவை அமைய உள்ளது.மேலும், நவீன சமையலறை, மாணவ மாணவிகள் விடுதிகள், மருத்துவ நிலைய அலுவலர் மற்றும் செவிலியர் குடியிருப்பும் உள்ளது.

அதேபோல், மருத்துவகல்லுாரி வளாகம் ஏழு தளங்களை கொண்டுள்ளது. இதில், தரை தளத்தில் உடற்கூறியல் பிரிவு, முதல் தளத்தில் விரிவுரையாளர் அறை, 2ம் தளத்தில் உடலியல் பிரிவு, 3ம் தளத்தில் சமூகம் சார்ந்த மருத்துவப்பிரிவு அமைய உள்ளது.நான்காவது தளத்தில் நோய் கிருமி ஆராய்ச்சி பிரிவு, 5வது தளத்தில் நுண்ணுயிரியல் பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு, 6வது தளத்தில் மருந்தியல் பிரிவு அமைகிறது. இதுதவிர 800 இருக்கைகள் கொண்ட அரங்கக்கூடம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் அனைத்து கல்லுாரிகளையும் ஆய்வு செய்து, நடப்பு கல்வியாண்டிலேயே (2021-22) மாணவர் சேர்க்கை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரியில் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், உபகரணங்கள், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள் மற்றும் துணை பேராசிரியர்கள் நியமனங்கள், மருத்துவமனை கட்டடத்தின் உள் கட்டமைப்புகள் குறித்தும் தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வறிக்கைக்கு பின், மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி பெறப்பட்டது. இதையொட்டி நடப்பு கல்வியாண்டில் 150 மாணவ, மாணவிகள் சேர்க்கையுடன் கல்லுாரி முதலாமாண்டு துவங்க உள்ளது.இதில், அனாட்டமி, பிசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி ஆகிய பிரிவுகள் தற்போது இயங்க உள்ளன. இதற்காக கல்லுாரி டீன் தலைமையில், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 150 மருத்துவர்கள், 200 செவிலியர்கள் உட்பட 470 பேர் கல்லுாரியில் பணியமர்த்தப்படுகின்றனர்.

மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விரைவில் துவங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 28ம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்து, மருத்துவகல்லுாரி மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.இதையொட்டி மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் பெயிண்ட் அடித்தல், பூச்சு வேலைகளை முடித்தல் போன்ற இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X