சாலையில் பறந்த பணம்; அள்ளிச் சென்ற மக்கள்: வைரல் வீடியோ

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கலிபோர்னியா: அமெரிக்காவில், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம், டிரக் கதவு திறந்ததால் சாலையில் பறந்து செல்ல, அதனை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் பணம், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென் டிரக்கின் கதவு திறந்து கொள்ள, சாலையில் பணம் பறக்க துவங்கியது. இதனை கண்ட வாகன ஓட்டிகள், தங்கள்
US, bank, money

கலிபோர்னியா: அமெரிக்காவில், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம், டிரக் கதவு திறந்ததால் சாலையில் பறந்து செல்ல, அதனை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் பணம், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென் டிரக்கின் கதவு திறந்து கொள்ள, சாலையில் பணம் பறக்க துவங்கியது. இதனை கண்ட வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை நிறுத்தி, பணத்தை அள்ளத் துவங்கினர். இதனால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


latest tamil news



latest tamil news


பணத்தை எடுத்தவர்கள் திரும்ப தர வேண்டும் என அந்த வங்கி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த சாலையில் சென்ற வாகனங்களின் பதிவெண்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலர் நேர்மையாக முன்வந்து பணத்தை ஒப்படைத்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்ட டிரக் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
22-நவ-202117:52:19 IST Report Abuse
DVRR என்ன ஒரு கேவலமான நிகழ்வு இது 1) பணம் என்பது ஏதோ பழக்கூடையில் எடுத்துக்கொண்டு போவதில்லை அல்லது மணல் எடுத்துக்கொண்டு போவது போல போவதில்லை பெட்டி, பெட்டிக்குள் பணம் வைத்து அதை லாக் செய்து அந்த சாவிக்கொத்தை கொடுப்பார்கள் ஒருவரிடம் அவர் மட்டுமே அதை திறக்க முடியும். இவ்வளவு கேவலாமாக யாரும் பணத்தை கொண்டு போக மாட்டார்கள். 2) மக்களின் மனம் ஒரே வழியில் தான் செல்கின்றது அது மிக மிக முன்னேறிய அமெரிக்க என்று டப்பா அடித்தாலும் பிரீயாக கிடைத்தால் எதையும் எடுத்துக்கொள்வோம் என்ற மனநிலை. கேவலத்திலும் கேவலம் இந்த மக்கள் மனம்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-நவ-202116:54:44 IST Report Abuse
Rasheel அமெரிக்காவின் மறுபக்கம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-நவ-202116:35:51 IST Report Abuse
மலரின் மகள் கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கிட்டு தரும் என்பார்கள். ட்ரக்கின் கதவை திறந்து கொடுத்திருக்கிறது. கருணையே கருணை. அதுவும் இந்த கொரநா காலத்தில் தேவை படும் உதவி தேவையான நேரத்தில் கிடைத்த்திருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கட்டும், நாம் செல்லும்போது நடக்கட்டும். இதில் எதோ சம்பந்தம் இருக்கும். இப்படியா அசட்டையாக கொண்டுசெல்வது. வேண்டுமென்ற கதவு திறந்து கொண்டது யாருமே அண்டாகாகசம் அபூகாகசம் சொல்லாமலே. ஆச்சரியமாக இல்லை.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
22-நவ-202120:24:18 IST Report Abuse
Sanny மகளே அப்பர் ( திருநாவுக்கரசர்) தேவாரம் பாடி இருப்பார். கதவு தானாக திறந்தது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X