மயிலாடுதுறை : கொள்ளிடம் ஆற்றில் நடுவில் உள்ள திட்டு பகுதியில் சிக்கிய தம்பதியை, படகு மூலம் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் திட்டு பகுதி உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த கணேசன்; மனைவி காந்திமதி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 150 ஆடுகளை திட்டு பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர்.பகல் நேரத்தில் ஆடுகள் மேய்ந்தவுடன், அவற்றை அங்கேயே பாதுகாப்பாக பட்டியில் அடைத்துவிட்டு, மாலையில் அவர்களுக்கு சொந்தமான படகில், நாதல்படுகை வந்து விடுவது வழக்கம்.
சில தினங்களாக திட்டுப் பகுதியில் தங்கி, ஆடுகளை பாதுகாத்து வந்த கணவன், மனைவி இருவரும், திடீரென நேற்று ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சூழ்ந்து கொண்டதால் சிக்கி கொண்டனர்.போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த கணேசன், காந்திமதி மற்றும் அவர்களது 150 ஆடுகளை, நீண்ட போராட்டத்திற்கு பின், பத்திரமாக மீட்டு படகு வாயிலாக கரைக்கு அழைத்து வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE