சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., பூமிநாதன் கொலை வழக்கில் 2 பேர் கைது: உதவிய 2 சிறுவர்களிடமும் விசாரணை

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
திருச்சி: திருச்சியில் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனின் கொலை வழக்கில் தொடர்பு உடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கு துணையாக இருந்த 2 சிறுவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் 3 ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன் 56. இவருடைய சொந்த ஊர்

திருச்சி: திருச்சியில் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனின் கொலை வழக்கில் தொடர்பு உடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கு துணையாக இருந்த 2 சிறுவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



latest tamil news



திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் 3 ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன் 56. இவருடைய சொந்த ஊர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தைவெளி கிராமம். இவருக்கு கீதா (48) மனைவியும் மற்றும் அண்ணா பல்கலையில் எம்.இ படிக்கும் குகன் (24) என்ற மகனும் உள்ளனர்.

சம்பவத்தன்று நாவல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் பூமிநாதன் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சிலர் பைக்குகளில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றுள்ளனர். ஆடு ஏற்றிச் சென்றவர்கள் வேறு வழியில் தப்பிவிட்டனர். வேறு சிலரை பூமிநாதன் சுற்றிவளைத்தார். அப்போது மற்ற போலீஸ்காரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று நினைத்த திருடர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.


latest tamil news



இதையடுத்து சம்பவ இடத்திலேயே பூமிநாதன் உயிரிழந்தார். அவ்விடத்திற்கு வந்த போலீசார் சேகர் மற்றும் சித்திரவேல் ஆகியோர் இவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திருச்சி டி.ஐ.ஜி., சரவண சுந்தர், திருச்சி எஸ்.பி., சுஜித்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.சம்பவம் குறித்து, கீரனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


அரசு மரியாதையுடன் அடக்கம்


கொலையாளிகளை பிடிக்க, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பூமிநாதன் உடல், திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, ஏ.டி.ஜி.பி., செந்தாமரைக் கண்ணன் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.நேற்று (நவ.,21) மாலை அவரது உடல், திருச்சி சோழமா நகரில் போலீசாரின் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் தேடப்பட்டு வந்த கொலையாளிகள் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே தோகூர் என்ற பகுதியை சேர்ந்த அஜய், மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 சிறுவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
22-நவ-202121:51:46 IST Report Abuse
Krishnamurthy Venkatesan போலீஸ் இலாகா மந்திரி தகுந்த நடவடிக்கை உடன் எடுக்க வேண்டும். வெறும் நிவாரணம் கொடுத்தால் போதுமா? தீவிர விசாரணை நடத்தி உண்மையான காரணத்தை கண்டு பிடித்து குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்.
Rate this:
Cancel
22-நவ-202120:27:51 IST Report Abuse
kulandai kannan நான்கு வருடம் கழித்து, நாலடியார் சூர்யா இந்தக் குற்றவாளிகளை ஆதரித்து சினிமா எடுப்பார்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-நவ-202118:58:44 IST Report Abuse
r.sundaram ஆடு வெட்டுபவர்கள் அதே மாதிரி மனிதனையும் வெட்டி விட்டார்கள். இரக்கமற்றவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X