அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலீசுக்கு பாதுகாப்பு இல்லை அர்ஜுன் சம்பத் வேதனை

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருப்பூர் : ''தமிழகத்தில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது,'' என்று, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினார்.திருப்பூரில் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படாததற்கு தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே காரணம். போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வு

திருப்பூர் : ''தமிழகத்தில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது,'' என்று, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினார்.
திருப்பூரில் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படாததற்கு தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே காரணம். போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வு செய்ய வேண்டும்.கேரளா பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலையில் தொடர்புடைய அமைப்புகள், தடை செய்யப்பட வேண்டும்.

திருச்சியில் ஆடு திருடிய திருடர்களை பிடிக்க சென்ற, சிறப்பு எஸ்.ஐ., கொல்லப்பட்டுள்ளார். போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மாற வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்தாமலும், பெட்ரோல் விலை உயர்வை குறைக்காமலும் தமிழக அரசு ஏமாற்றி கொண்டிருக்கிறது.

வேளாண் சட்ட விவகாரத்தில், இந்திய விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கக்கூடாது என்று, போராட்டங்களுக்கு வெளிநாட்டில் இருந்து துாண்டி விட்டு கொண்டிருக்கின்றனர். ஜனநாயக அடிப்படையில், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி விட்டு கொடுத்துள்ளார். ஜன., 12ல் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை பூட்டும் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X