தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன தெரியும்...

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: எட்டு வழி சாலை திட்டத்துக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அன்னுாரில், 2,500 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என, தி.மு.க., அரசு தெரிவித்துள்ளது. வன பாதுகாப்பு சட்டத்துக்காக நாங்கள் போராடுகிறோம். வேளாண் சட்டத்தை போல இந்த சட்டமும் கொடியது தான்.தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன
சீமான், திருநாவுக்கரசர்

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: எட்டு வழி சாலை திட்டத்துக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அன்னுாரில், 2,500 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என, தி.மு.க., அரசு தெரிவித்துள்ளது. வன பாதுகாப்பு சட்டத்துக்காக நாங்கள் போராடுகிறோம். வேளாண் சட்டத்தை போல இந்த சட்டமும் கொடியது தான்.


தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன தெரியும்... போராடி போராடியே ஆட்சியையும், தங்கள் கட்சிகளுக்கு ஏராளமான சொத்துகளையும் சேர்த்தவர்கள் ஆயிற்றே!



நடிகரும், இயக்குனருமான சேரன் அறிக்கை: மொழியை கற்பது தவறில்லை. மொழியை திணிக்கக்கூடாது என்பதே அனேகரின் கருத்து. ஆனால், ஹிந்தி தெரியாதவர்களுக்கு திட்டங்கள் சென்றடைய வாய்ப்பில்லை என்பதால், 'மத்திய அரசு அறிவிக்கும்; செயல்படுத்தும் திட்டங்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும்' என கேட்பது ஒரு குடிமகனின் உரிமை.


மக்கள் கண்கலங்கும் வகையில் உருக்கமாக படம் எடுக்கிறீர்கள். நீங்கள் பொய் தகவலை கூறலாமா... மத்திய அரசின் எந்த திட்டங்கள், மொழி தெரியாததால் கிடைக்காமல் போயிற்று... இப்படி ஒருதலைப்பட்சமாக பேசாதீர்கள்!



அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன் அறிக்கை: பெரு மழைக்காலத்தில், மழை நீரை நம்மால் பாதுகாக்க முடியாதது பெரிய துரதிருஷ்டம். அதிக வெள்ளம் வரும் மாநிலங்களில் கூடுதலாக தடுப்பு அணைகள் உருவாக்க, மத்திய அரசு நிதி வழங்க ஆவன செய்ய வேண்டும்.


மழை பெய்யும் போது, வௌ்ளம் பற்றி யோசிப்பதும், வெயில் காலத்தில் தண்ணீர் சேமிப்பு பற்றி பேசுவதும் நம் தலைவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. இது மாறாது!



திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி
: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'இனி சட்டசபைக்கு முதல்வராக தான் நுழைவேன்' என்று கூறுவது முதல் தடவை அல்ல. அவர் போல பல மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். சந்திரபாபு நாயுடுக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றை கொண்டு, அவர் இது போல அறிவித்துள்ளார்


latest tamil news




அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றை சந்திரபாபு நாயுடு கொஞ்சம் வாசித்திருப்பார் போலிருக்கிறது. அதனால் சபதம் செய்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது!



காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் அறிக்கை: வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை பாராட்டுகிறோம்; வரவேற்கிறோம். இந்த சட்டங்களை ரத்து செய்தது போல, மின்சார திருத்த சட்டம் - 2020 சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பது இந்திய விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இப்படி கேட்கக் கூடாது... மத்திய அரசு, எந்த திட்டத்தையும், சட்டத்தையும் புதிதாக அறிவிக்கக் கூடாது என கேட்டு விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்குமே!



பா.ஜ., சிறுபான்மை தேசிய செயலர் வேலுார் இப்ராகிம் பேட்டி: தமிழகத்தில், சமீப காலமாக பள்ளி மாணவியரிடம், கடவுளுக்கு அடுத்து மதிக்கக்கூடிய, ஆசிரியர்களே தவறாக நடந்து கொள்கின்றனர். சிலர் செய்யும் தவறால், ஒட்டு மொத்த ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.


மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதற்குப் பதில், ஆசிரியர்களுக்கு பிறர் பாடம் எடுக்க வேண்டியதாகி விட்டதே... தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது!


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-நவ-202120:35:39 IST Report Abuse
Rajagopal போராட்டங்கள் செய்வதில் தவறில்லை. ஆனால் எல்லா போராட்டங்களும் தருமத்திற்காக செய்யப்படும் போராட்டங்களில்லை. சீமான் போன்றவர்கள் பிரிவினைவாதத்தை மனத்தில் வைத்து, முன்னேற்றத்திற்காக அரசு எதை செய்தாலும் செய்ய விடாமல் தடுப்பதற்காக போராட்டம் நடத்துகிறார்கள். இதில் இழப்பு மக்களுக்குத்தான் என்பதை அவர்கள் அறிவார்கள். இருந்தும், தங்களது சுயலாபத்திற்காக, எதுவும் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை, மத்திய அரசை எதையும் செய்ய விடமாட்டோம் என்று போராட்டம் நடத்துவது அறப்போர் அல்ல.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
23-நவ-202104:09:21 IST Report Abuse
meenakshisundaramதமிழர்கள் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும். இப்போது பிரச்சினை யார் உண்மை தமிழன் என்பது அல்ல .மேலும் தமிழன் என்னவெல்லாம் ஆதி காலத்தில் சாதித்தான் என்பதுவும் அல்ல .தமிழ் மொழி எவ்வளவு தூரம் மற்ற மொழிகளை விட உயர்ந்தது என்று எடை போடுவதுவும் அல்ல .இன்று வளர்ந்து வரும் தமிழ் இளைஞர்கள் உழைப்பின் உயர்வை அறியவேண்டும் மற்றும் நாட்டுக்கு உழைக்கவேண்டும் என்று சிந்திக்க வைப்பதே ஆகும் .சீமான் போன்றோர் நடத்துவது வெறுப்பு அரசியல் .இதைத்தான் திமுகவும் செயது அப்போ ஆட்சிக்கு வந்துள்ளது -இது வேலைக்கு ஆகாது என்பார்கள் .ரஜினி காந்த அன்றே கூறிவிட்டார் -நாட்டை சுடுகாடு ஆக்கிவிடாதீர்கள் என்று.இதில் உண்மை இல்லாமல் இல்லை .முன்பெல்லாம் அரசியல் கூட்டங்கள் விரும்பி கேட்கப்பட்டன ,அவற்றில் ஏச்சு . இல்லாத பேச்சு இருக்கும் .பேச்சின் நயம் கருதியே அரசியலில் ஈடுபாடு இல்லாதவரும் மாற்று கட்சியினரும் கூட வந்து ஒரு சில தலைவர்களின் பேச்சை ரசிப்பார்கள் .வெறுப்பேத்தும் விஷயங்கள், சவால் ,மற்றும் செருப்பால் அடிப்பேன் என்ற வீர வசனங்கள் இன்று தமிழருக்கு சகஜமாக ஆகிவிட்டது .மூன்றாம் தர அரசியல் வாதிகள் முன்னேறியுள்ளார்கள் .மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்சி மாறுகிறார்கள் பெரிய கட்சியினரிடம் தஞ்சம் புகுந்து அவர்களின் அடிமைகளாக மாறி பணம் பெற்று மக்களை பற்றி சிறிதும் அக்கறையே இல்லாதவர்களே இன்று தமிழக அரசியலில் காணப்படுகிறார்கள் .இதை ஜாதி யை ஒழிப்போம் என்ற கூக்குரல் வேறே -இது அண்ணாதுரை அன்றே சொன்ன மூணு படி அரிசி திட்டம் போலவே .இதை உபயோகிக்காத தலைவர்களே இல்லை ,ஆனால் இவர்கள் சம்பந்தம் பண்ணிக்கொள்வதோ இல்லை பத்திரிக்கை அடிப்பதோ ஜாதியை பாதுக்காகத்தான் என்பதே நிதர்சனம் ,ஏன் பள்ளிகளில் கல்லூரிகளில் ஜாதி சாண்றிதகளே இல்லாமல் சேரலாம் என்று சீமான் முதல் கொண்டு ஒரு தலைவரும் வாக்கு கொடுக்கவில்லை .அடிவேரை அப்படியே விட்டு வைத்து விட்டு தண்ணீர் ஊற்றினால் அதே செடி தானே வளரும் ?ஒரு சிலர் ஜாதி அரசியலையும் விடாமல் இன்னும் மக்களின் வாக்குகளை அப்படியே அள்ளணும்னு மொழி .மாநிலம் ,பண்பாடு ,கலாச்சாரம் என்று பல சிறிய ஆயுதங்களை கையில் எடுத்துள்ளார்கள் -அரசியல் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் என்று பெர்னார்ட் ஷா அன்றே கூறினார் ஆனால் இப்போது அரசியலே அவர்களின் முதல் புகலிடம் என்றாகி விட்டது.தமிழக மக்கள் நன்கு சிந்தித்து அண்டை மாநிலங்களை பார்த்தாவது தேர்தல் நேரங்களில் பொறுப்புடன் நடந்து கொண்டாலே தான் நல்லாட்சி மலரும் .இல்லை என்றால் -யு கெட் வாட் யு டீசெர்வ் '-என்னும் கூற்றுப்படி அவர்களுக்கு ஏற்றது எதுவோ அதையே பெறுவார்கள்...
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
22-நவ-202120:07:36 IST Report Abuse
spr "மத்திய அரசின் எந்த திட்டங்கள், மொழி தெரியாததால் கிடைக்காமல் போயிற்று" பெரும்பாலான திட்டங்கள் எந்த மொழியில் இருந்தாலும் மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு குறைவே தமிழகத்தில் உள்ள பல மக்கள் நலத்திட்டங்கள் இன்னும் மக்களால் அறியப்படாமல்தான் இருக்கிறது அதனால்தான் ஒவ்வொரு திட்டத்துக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் முகவர்களாக செயல்பட இடைத்தரகர்கள் அதிகமாகிவிட்டார்கள் "யுடியூப்" அப்படித்தான் பிரபலமாகியது ஆனால் அவற்றில் பல நம்பகத்தன்மை உடையதாக இல்லை நம் நாட்டில் படித்து அறிவு பெற்றவர்களை விட செவியால் கேட்டு அறிந்தவர்களே அதிகமாம் எனவே இருக்கும் மக்கள் நலத்திட்டங்களை அவர்களுக்கு உண்மையாக செய்தித்தாள்களும் ஊடகங்களும் கொண்டு சேர்க்க வேண்டும் தமிழக அரசின் "ஆன்லைன்" கணிணி திட்டங்களைப்போல அதிகாரிகளை அணுகினால்தான் இறுதிப்பயன் கிடைக்கும் அதற்கு லஞ்சம் கொடுத்தே ஆகா வேண்டுமென்ற நிலை மாற வேண்டும் படிப்படியாக எந்த திட்டம் என்ன பயன் தரும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை தொலைக்காட்சிகள் வெளியிட வேண்டும் அதற்கென ஒரு தொலைக்காட்சியை அரசே தொடங்கலாம் நல்ல பலன் கிடைக்கும் அதுவரை இடைத்தரகர்களை லஞ்ச ஊழலைத் தவிர்க்க இயலாது
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
22-நவ-202116:27:53 IST Report Abuse
Soumya போராட்டம் பண்ணுனா தானே ஓசிகோட்டர் கோழி புரியாணி கெடைக்கும் டுமிழனுங்க நாக்க தொங்க போட்டுட்டு போராடுவானுங்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X