தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன தெரியும்...| Dinamalar

தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன தெரியும்...

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (16)
Share
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: எட்டு வழி சாலை திட்டத்துக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அன்னுாரில், 2,500 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என, தி.மு.க., அரசு தெரிவித்துள்ளது. வன பாதுகாப்பு சட்டத்துக்காக நாங்கள் போராடுகிறோம். வேளாண் சட்டத்தை போல இந்த சட்டமும் கொடியது தான்.தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன
சீமான், திருநாவுக்கரசர்

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: எட்டு வழி சாலை திட்டத்துக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அன்னுாரில், 2,500 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என, தி.மு.க., அரசு தெரிவித்துள்ளது. வன பாதுகாப்பு சட்டத்துக்காக நாங்கள் போராடுகிறோம். வேளாண் சட்டத்தை போல இந்த சட்டமும் கொடியது தான்.


தமிழக கட்சிகளுக்கு போராட்டத்தை தவிர, வேறு என்ன தெரியும்... போராடி போராடியே ஆட்சியையும், தங்கள் கட்சிகளுக்கு ஏராளமான சொத்துகளையும் சேர்த்தவர்கள் ஆயிற்றே!நடிகரும், இயக்குனருமான சேரன் அறிக்கை: மொழியை கற்பது தவறில்லை. மொழியை திணிக்கக்கூடாது என்பதே அனேகரின் கருத்து. ஆனால், ஹிந்தி தெரியாதவர்களுக்கு திட்டங்கள் சென்றடைய வாய்ப்பில்லை என்பதால், 'மத்திய அரசு அறிவிக்கும்; செயல்படுத்தும் திட்டங்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும்' என கேட்பது ஒரு குடிமகனின் உரிமை.


மக்கள் கண்கலங்கும் வகையில் உருக்கமாக படம் எடுக்கிறீர்கள். நீங்கள் பொய் தகவலை கூறலாமா... மத்திய அரசின் எந்த திட்டங்கள், மொழி தெரியாததால் கிடைக்காமல் போயிற்று... இப்படி ஒருதலைப்பட்சமாக பேசாதீர்கள்!அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன் அறிக்கை: பெரு மழைக்காலத்தில், மழை நீரை நம்மால் பாதுகாக்க முடியாதது பெரிய துரதிருஷ்டம். அதிக வெள்ளம் வரும் மாநிலங்களில் கூடுதலாக தடுப்பு அணைகள் உருவாக்க, மத்திய அரசு நிதி வழங்க ஆவன செய்ய வேண்டும்.


மழை பெய்யும் போது, வௌ்ளம் பற்றி யோசிப்பதும், வெயில் காலத்தில் தண்ணீர் சேமிப்பு பற்றி பேசுவதும் நம் தலைவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. இது மாறாது!திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி
: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'இனி சட்டசபைக்கு முதல்வராக தான் நுழைவேன்' என்று கூறுவது முதல் தடவை அல்ல. அவர் போல பல மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். சந்திரபாபு நாயுடுக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றை கொண்டு, அவர் இது போல அறிவித்துள்ளார்


latest tamil news
அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றை சந்திரபாபு நாயுடு கொஞ்சம் வாசித்திருப்பார் போலிருக்கிறது. அதனால் சபதம் செய்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது!காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் அறிக்கை: வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை பாராட்டுகிறோம்; வரவேற்கிறோம். இந்த சட்டங்களை ரத்து செய்தது போல, மின்சார திருத்த சட்டம் - 2020 சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பது இந்திய விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இப்படி கேட்கக் கூடாது... மத்திய அரசு, எந்த திட்டத்தையும், சட்டத்தையும் புதிதாக அறிவிக்கக் கூடாது என கேட்டு விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்குமே!பா.ஜ., சிறுபான்மை தேசிய செயலர் வேலுார் இப்ராகிம் பேட்டி: தமிழகத்தில், சமீப காலமாக பள்ளி மாணவியரிடம், கடவுளுக்கு அடுத்து மதிக்கக்கூடிய, ஆசிரியர்களே தவறாக நடந்து கொள்கின்றனர். சிலர் செய்யும் தவறால், ஒட்டு மொத்த ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.


மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதற்குப் பதில், ஆசிரியர்களுக்கு பிறர் பாடம் எடுக்க வேண்டியதாகி விட்டதே... தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது!


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X