அணைகளில் தேங்கிய 100 டன் சகதி உலக வங்கி நிதியில் அகற்ற நடவடிக்கை| Dinamalar

அணைகளில் தேங்கிய 100 டன் சகதி உலக வங்கி நிதியில் அகற்ற நடவடிக்கை

Added : நவ 22, 2021
Share
ஊட்டி : குந்தா மின் வட்டத்தில் இரு அணைகளில் தேங்கியுள்ள, 100 டன் சகதியை, உலக வங்கி நிதியில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குந்தா அணை, 89 அடி, கெத்தை அணை, 156 அடி உயரம் கொண்டவை. இரு அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால், 355 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பருவமழையின்போதும், அருகில் உள்ள தோட்டங்களில் அடித்து வரப்படும் சகதி நேரடியாக
 அணைகளில் தேங்கிய 100 டன் சகதி உலக வங்கி நிதியில் அகற்ற நடவடிக்கை

ஊட்டி : குந்தா மின் வட்டத்தில் இரு அணைகளில் தேங்கியுள்ள, 100 டன் சகதியை, உலக வங்கி நிதியில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குந்தா அணை, 89 அடி, கெத்தை அணை, 156 அடி உயரம் கொண்டவை. இரு அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால், 355 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பருவமழையின்போதும், அருகில் உள்ள தோட்டங்களில் அடித்து வரப்படும் சகதி நேரடியாக அணையில் கலக்கிறது.இதனால், இரு அணைகளிலும் பாதி அளவுக்கு சகதி நிறைந்து, தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சகதியால் மின் சாதனங்கள் பழுதாவதால், கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு மின் வினியோகம் தடைப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் உச்ச மின்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உலக வங்கி நிதி வாயிலாக, 100 டன் அளவுக்கு சகதியை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X