அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை ஏமாற்றிய அரசு: ஜெயகுமார் ஆவேசம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
சென்னை : ''பொங்கல் பரிசாக தி.மு.க., அரசு, 3,000 ரூபாய் தருவதற்கு பதிலாக, மக்களுக்கு நாமம் போட்டுள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.சென்னையில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட பின், அவர் அளித்தபேட்டி:டீசலுக்கு 4 ரூபாய் மானியம் அறிவித்த தி.மு.க., அரசு இதுவரை தரவில்லை. மழை பாதிப்பில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. அதை ஆய்வு செய்து


சென்னை : ''பொங்கல் பரிசாக தி.மு.க., அரசு, 3,000 ரூபாய் தருவதற்கு பதிலாக, மக்களுக்கு நாமம் போட்டுள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னையில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட பின், அவர் அளித்தபேட்டி:
டீசலுக்கு 4 ரூபாய் மானியம் அறிவித்த தி.மு.க., அரசு இதுவரை தரவில்லை. மழை பாதிப்பில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. அதை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நட வடிக்கை இல்லை.பொருளாதார ரீதியான பிரச்னைகள் இருந்தாலும், பொங்கல் பரிசு தொகையாக, 2,500 ரூபாயை, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் அ.தி.மு.க., அரசு வழங்கியது. போட்டி போட்டு 3,000 ரூபாய் தருவதற்கு பதிலாக, தி.மு.க., அரசு மக்களுக்கு நாமத்தை தான் போட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண நிதி வழங்கவில்லை.அடிப்படை தேவையான பொருட்களும் வழங்கவில்லை. ஆனால், விளம்பரத்திற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.தி.மு.க., ஆட்சியில், போலீஸ் துறை தாக்குதலுக்கு உள்ளாகி வருவது வழக்கம். போலீசாருக்கு பாதுகாப்பு இல்லையேல், மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும்.

உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறுவதற்கு ஏற்றவாறு வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.,விற்கு ஆதரவாக, தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. நீதிமன்றத்தில் பதில் சொல்லவேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X