அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடமை தவறிவிட்டது அரசு : பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Added : நவ 22, 2021
Share
Advertisement
மதுரை : ''சிறப்பு எஸ்.ஐ., கொலை சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மட்டுமின்றி ஆட்சியாளர் கடமையிலிருந்து தி.மு.க., அரசு தவறி விட்டதை காட்டுகிறது,'' என முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.மதுரையில் பா.ஜ., சார்பில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களிடமிருந்து விருப்ப மனுக்களை பொன் ராதாகிருஷ்ணன் பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது: பா.ஜ.,



மதுரை : ''சிறப்பு எஸ்.ஐ., கொலை சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மட்டுமின்றி ஆட்சியாளர் கடமையிலிருந்து தி.மு.க., அரசு தவறி விட்டதை காட்டுகிறது,'' என முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

மதுரையில் பா.ஜ., சார்பில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களிடமிருந்து விருப்ப மனுக்களை பொன் ராதாகிருஷ்ணன் பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:

பா.ஜ., சார்பில் போட்டியிட இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மனு கொடுத்துள்ளனர். மத்திய அரசு குறைத்தது போல, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பா.ஜ., சார்பில் இன்று போராட்டம் நடக்கிறது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என கூறியது. தற்போது மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும் என குற்றம் சாட்டுகிறது.

காங்., தி.மு.க., முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த போது பெட்ரோல், டீசல் ஒப்பந்தம் காரணமாக தற்போது வரை மத்திய அரசு பல கோடி ரூபாய் வட்டி செலுத்தி வருகிறது. அந்த நிதிச்சுமையை மத்திய அரசு சமாளித்து வருகிறது.தேர்தல் நேரத்தில் நகராட்சி தேர்தலுக்கான கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் போன்ற திட்டங்களில் கருணாநிதி புகைப்படத்தை இணைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது, என்றார்.

மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம், நகர் தலைவர் சரவணன், தேர்தல் பொறுப்பாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X