சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுடுதண்ணீரில் விழுந்த 3 வயது குழந்தை பலி

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே, சுடுதண்ணீரில் விழுந்த மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்துார் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், 34. இவரது மனைவி சுகுனா, 28; மகன் மோதிஷ்வரன், 3. சுகுணா கடந்த 16ந் தேதி குழந்தை மோதிஸ்வரனை குளிக்க வைப்பதற்காக ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் ஊற்றி வைத்து

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே, சுடுதண்ணீரில் விழுந்த மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்துார் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், 34. இவரது மனைவி சுகுனா, 28; மகன் மோதிஷ்வரன், 3. சுகுணா கடந்த 16ந் தேதி குழந்தை மோதிஸ்வரனை குளிக்க வைப்பதற்காக ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் ஊற்றி வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.எதிர்பாராதவிதமாக மோதிஷ்வரன் அன்னக்கூடையில் இருந்த சுடுதண்ணீரில் இறங்கியுள்ளார். வயிற்று அடிபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மோதிஸ்வரனை விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளித்தபின், மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மோதிஷ்வரன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X