நாலரை லட்சம் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் : அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்| Dinamalar

நாலரை லட்சம் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் : அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

Added : நவ 22, 2021
Share
மதுரை : 'தி.மு.க., தேர்தலில் வாக்குறுதியளித்தபடி அரசு துறைகளில் காலியான நாலரை லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இச்சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் அன்பரசு, பொது செயலாளர் செல்வம் கூறியதாவது: முந்தைய ஆட்சியை காட்டிலும் தற்போதைய தி.மு.க., ஆட்சியில் அரசு



மதுரை : 'தி.மு.க., தேர்தலில் வாக்குறுதியளித்தபடி அரசு துறைகளில் காலியான நாலரை லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் அன்பரசு, பொது செயலாளர் செல்வம் கூறியதாவது:

முந்தைய ஆட்சியை காட்டிலும் தற்போதைய தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளனர். கடைநிலை ஊழியர்களை நிர்வாக காரணங்களை காட்டி மாற்றுவது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கொரோனா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் ஞாயிறு விடுமுறை நாளிலும் செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிப்பதை தவிர்க்க வேண்டும். வீடு வாரியாக செல்லும் செவிலியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஹிந்து அறநிலையத்துறையில் ஆன்லைன் பதிவேற்றம் என்ற பெயரில் புள்ளிவிவரங்களை உடனுக்குடன் கேட்கின்றனர். ஆனால் அரசு துறைகளில் நாலரை லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இரு ஆண்டுகளாக ஆட்கள் தேர்வு நடக்கவில்லை.
கொரோனா பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும். சங்க மாநில மாநாடு சென்னையில் டிச.18, 19ல் நடக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடப்படவுள்ளது, என்றனர்.

மாநில நிர்வாகிகள் மங்களபாண்டியன்,வாசுகி, பாஸ்கரன் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X