பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகரில் இருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
பவானிசாகர்: நீர்வரத்து அதிகரித்த நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த, தொடர் கனமழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம், கடந்த, 17 ம் தேதி, 104 அடியை எட்டியது. முழு கொள்ளளவை எட்ட ஒரு அடி நீரே தேவைப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணைக்கு வரும் நீர், அப்படியே பவானி ஆற்றில் உபரி

பவானிசாகர்: நீர்வரத்து அதிகரித்த நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த, தொடர் கனமழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம், கடந்த, 17 ம் தேதி, 104 அடியை எட்டியது. முழு கொள்ளளவை எட்ட ஒரு அடி நீரே தேவைப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணைக்கு வரும் நீர், அப்படியே பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டது. மழை குறைந்ததால், நீர்வரத்து சரிந்ததாலும், அணையில் இருந்து உபரி நீர் திறப்பு, நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று, 5,522 கன அடியாக நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த நீர் அப்படியே, பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 104 அடியாக, நீர் இருப்பு, 31.9 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X