பொது செய்தி

தமிழ்நாடு

'சிங்கத்தை' மயக்கி கடத்திய 'புள்ளிமான்': ஈரோடு அருகே தஞ்சம்; தேடி திரிந்த தந்தைக்கு மிரட்டல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஈரோடு: கல்லூரி படிக்கும் மகனை, கடத்திச்சென்று வைத்துள்ள, 21 வயது பெண், அவரது குடும்பத்தினர் மீது, நடவடிக்கை கோரி, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், தந்தை மனு அளித்தார்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி, பூனையானூரை சேர்ந்த கூலி தொழிலாளி காந்தி, 44; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய மூத்த மகன் வல்லரசு, 18; கல்லூரி முதலாமாண்டு

ஈரோடு: கல்லூரி படிக்கும் மகனை, கடத்திச்சென்று வைத்துள்ள, 21 வயது பெண், அவரது குடும்பத்தினர் மீது, நடவடிக்கை கோரி, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், தந்தை மனு அளித்தார்.


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி, பூனையானூரை சேர்ந்த கூலி தொழிலாளி காந்தி, 44; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய மூத்த மகன் வல்லரசு, 18; கல்லூரி முதலாமாண்டு மாணவன். வீட்டருகே வசித்த, திருமணமாகி கணவனை பிரிந்த நதியா, 21, அவரது குடும்பத்தினர், எனது மகனை ஆசை வார்த்தை காட்டி மயக்கி, கொத்தடிமை போல் நடத்தினர். அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தேன். போலீசார் விசாரணையில் பெண், அவரது குடும்பத்தினர், மகனை இனி தொடர்பு கொள்ளமாட்டோம் என எழுதி கொடுத்து சென்றனர். ஆனால், மகனை மீண்டும் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று விட்டனர். ஒன்றரை ஆண்டாக மகன் இருக்குமிடம் தெரியாமல் தவித்து வருகிறேன். தற்போது ஈரோடு மாவட்டம் பூந்துறை காத்துப்பாளையம் புதுகாலனியில், வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது மகனை காட்டவில்லை. மகனை அனுப்பி வைக்குமாறு கேட்டபோது, என்னை, என் மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். மகனை ஆசை வார்த்தை கூறி, கடத்தி வைத்திருப்போரை, போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X