பொது செய்தி

தமிழ்நாடு

'மூன்று வேளாண் சட்டங்களை பார்லி.,யில் வாபஸ் பெறணும்'

Added : நவ 22, 2021
Share
Advertisement
வேடசந்தூர் : 'மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் பார்லிமென்டில் வாபஸ் பெற்றால் தான் மகிழ்ச்சி'என, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் கூறினார்.வேடசந்துாரில் குடகனாறு பாதுகாப்பு சங்கம், தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் குடகனாறு வள மீட்பு திட்டமிடல் கூட்டத்தில் 'தண்ணீர் மனிதர்'

வேடசந்தூர் : 'மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் பார்லிமென்டில் வாபஸ் பெற்றால் தான் மகிழ்ச்சி'என, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் கூறினார்.

வேடசந்துாரில் குடகனாறு பாதுகாப்பு சங்கம், தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் குடகனாறு வள மீட்பு திட்டமிடல் கூட்டத்தில் 'தண்ணீர் மனிதர்' ராஜேந்திர சிங் பங்கேற்றார்.அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது ஓராண்டாக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த சிறிய வெற்றி. அந்த சட்டத்தை பார்லிமென்டில் வாபஸ் பெற்றால் தான் முழுமையான வெற்றி. விவசாயிகளின் இது போன்ற போராட்டம் சுதந்திரத்திற்கு முன் இல்லை.ஊதியம் கூட பெற முடியாத நிலை இருப்பதால் இளைஞர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதை தடுக்க குறைந்தபட்ச ஆதார விலை மிக முக்கியம். குளங்கள், ஆறுகள் தங்களது நீர்ப்போக்கு, துாய்மை இழந்து மாசுபட்டுள்ளது. விவசாயத்திற்கான நீரை உறுதி செய்ய, விவசாயிகளின் வாழ்வாதார உரிமையை உறுதி செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X