அரசியல் செய்தி

தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தி.மு.க., அரசு துரோகம் : பா.ஜ., விவசாய அணி தலைவர் குற்றச்சாட்டு

Added : நவ 22, 2021
Share
Advertisement
அன்னுார் : ''முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், தி.மு.க., அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டது,'' என பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறினார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், குறைக்காத தமிழக அரசை கண்டித்தும், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், அன்னுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை வகித்தார்.பா.ஜ.,
B.J.P,BJP,Bharatiya Janata Party,D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,பா.ஜ



அன்னுார் : ''முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், தி.மு.க., அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டது,'' என பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், குறைக்காத தமிழக அரசை கண்டித்தும், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், அன்னுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை வகித்தார்.
பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் பேசியதாவது:

பல மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து உள்ளன. ஆனால், தி.மு.க., அரசு மறுக்கிறது. முல்லை பெரியாறு அணையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம். ஆனால், 136 அடியிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அணையை கேரளா அமைச்சர் திறந்துள்ளார். இதனால், 3 டி.எம்.சி., தண்ணீர் வீணாகி விட்டது.

கேரளா அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தமிழகத்துக்கு ஸ்டாலின் துரோகம் செய்துள்ளார். நடிகர்கள் பலர் கட்டியுள்ள விடுதிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.'ஜெய் பீம்' படத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்துள்ளன. எனவே தி.மு.க., அரசு அந்த படத்தில் நடித்த நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X