பொது செய்தி

தமிழ்நாடு

கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் கட்டுமான பணி 75 சதவீதம் நிறைவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தையை, ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 51.?9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணி, 2019 டிச., மாதம் தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் மந்த திமாக நடந்த நிலையில், சில மாதமாக விறுவிறுப்பாக நடக்கிறது. 75 சதவீத பணி முடிந்த நிலையில், தை பொங்கலுக்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள்

ஈரோடு: ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தையை, ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 51.?9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணி, 2019 டிச., மாதம் தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் மந்த திமாக நடந்த நிலையில், சில மாதமாக விறுவிறுப்பாக நடக்கிறது. 75 சதவீத பணி முடிந்த நிலையில், தை பொங்கலுக்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஜவுளி சந்தை வளாகத்தில் அமைக்கப்படும், ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம், 12 ஆயிரத்து 427 சதுர மீட்டர் பரப்பளவில், மூன்று தளங்களாக கட்டப்படுகிறது. மூன்று தளங்களிலும், 292 கடைகள், பார்க்கிங் வசதியுடன் அமையவுள்ளது. மக்களுக்காக நான்கு லிப்ட், சரக்கு கொண்டு செல்ல ஏதுவாக ஒரு பெரிய லிப்ட், இரண்டு எக்ஸலேட்டரும் அமைக்கப்பட உள்ளது. கட்டுமான பணி, 75 சதவீதம் முடிந்து, தரைப்பகுதிக்கு டைல்ஸ், ஜன்னல், கதவு, மின் இணைப்பு, பெயின்ட் அடிக்கும் பணி, கட்டடத்தை சுற்றி வடிகால், பாதுகாப்பு அம்சங்கள் செய்வது மட்டுமே பாக்கியுள்ளது. பணி நிறைவு ஒப்பந்த காலம் மார்ச் வரை உள்ளது. ஆனால், ஜன., மாதம் தை, பொங்கல் திருநாளில் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதைவட மின் கேபிள்: கனி மார்க்கெட் வணிக வளாகத்துக்கு, புதைவட மின் கேபிளில் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது. இதற்காக பி.எஸ்., பார்க் பகுதி ஜங்ஷனிலிருந்து, திருவேங்கிட சாமி வீதி வழியாக வணிக வளாகம் வரை, 255 மீ., நீளத்துக்கு குழி தோண்டி பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X