உதவிப்பேராசிரியர்கள் நியமனத்தில் முன்னுரிமை : கவுரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
மதுரை : 'தமிழகத்தில் துவங்கப்படவுள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.சங்க மாநில தலைவர் தங்கராஜ் கூறியதாவது: மாணவர்கள் நலன் கருதி 10 அரசு கலை மற்றும் அறிவியல்



மதுரை : 'தமிழகத்தில் துவங்கப்படவுள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
சங்க மாநில தலைவர் தங்கராஜ் கூறியதாவது:
மாணவர்கள் நலன் கருதி 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவங்க அரசு உத்தரவு பிறப்பித்து 170 உதவி பேராசிரியர்கள், 170 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான நிதி ஒதுக்கீடும் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.அடுத்த கல்வியாண்டு முதல் துவங்கவுள்ள இக்கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் போது ஏற்கனவே அண்ணாமலை பல்கலை உபரி பேராசிரியர்கள் பணி நிரவல் மற்றும் நிரந்தர பேராசிரியர்கள் பணி நிரவல் காரணமாக பணி வாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்ட யு.ஜி.சி., தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு முன்வர வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X