சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து சிக்னல் கூண்டில் அத்துமீறி புகுந்தவரால் பரபரப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, ப.செ.,பார்க் சந்திப்பு பகுதியில் உள்ள, போக்குவரத்து சிக்னல் கட்டுப்பாட்டு கூண்டில், ஊர்காவல் படையை சேர்ந்த ஒரு பெண், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், நேற்று மதியம் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக நடந்து வந்த, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர், போக்குவரத்து சிக்னல் கட்டுப்பாட்டு கூண்டுக்குள் நுழைந்தார். பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம்

ஈரோடு: ஈரோடு, ப.செ.,பார்க் சந்திப்பு பகுதியில் உள்ள, போக்குவரத்து சிக்னல் கட்டுப்பாட்டு கூண்டில், ஊர்காவல் படையை சேர்ந்த ஒரு பெண், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், நேற்று மதியம் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக நடந்து வந்த, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர், போக்குவரத்து சிக்னல் கட்டுப்பாட்டு கூண்டுக்குள் நுழைந்தார். பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் ஹிந்தியில் ஏதோ கத்தினார். பயந்து போன பெண் இறங்கி ஓட்டம் பிடித்து, அருகிலிருந்த டவுன் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் அந்த ஆசாமி, போக்குவரத்து சிக்னல் பட்டனை தாறுமாறாக அழுத்த துவங்கினார். விரைந்து வந்த போலீசார் கூண்டில் இருந்து இறங்குமாறு கூறினர். வாலிபர் இறங்க மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போலீசார் தங்கள் பாணியில் கவனித்து, வலுக்கட்டாயமாக இறக்கினர். அப்போது திடீரென சாலையில் படுத்து, மனநலம் பாதித்தவர் போல் புலம்பினார். சிறிது நேர விசாரணைக்கு பின், வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X