'பூந்தோட்டமா வாழ்க்கை; போராட்டமே வாழ்க்கை':பாதாள சாக்கடை இணைப்பு தர தாமதம்: மாநகர பெரியார் நகர் மக்கள் ஆதங்கம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஈரோடு: பாதாள சாக்கடை இணைப்பு தர தாமதம் ஆவதால், கொசுக்கடி மற்றும் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றத்துடன், நாட்கள் கழிவதாக, மாநகராட்சி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகர், மாநகரின் இதய பகுதியாக உள்ளது. இங்குள்ள ஒன்பதாவது வீதியில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க மாநகராட்சி

ஈரோடு: பாதாள சாக்கடை இணைப்பு தர தாமதம் ஆவதால், கொசுக்கடி மற்றும் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றத்துடன், நாட்கள் கழிவதாக, மாநகராட்சி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


ஈரோடு மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகர், மாநகரின் இதய பகுதியாக உள்ளது. இங்குள்ள ஒன்பதாவது வீதியில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதில், 20 வீடுகளுக்கு இணைப்பு தரப்பட்ட நிலையில், 25 வீடு களுக்கு இணைப்பு தர தாமதமாவதாக, அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க, வீடுகளில் இருந்த சாக்கடை குழாய்களை மூடி, தண்ணீர் வெளியேறாதபடி செய்தனர். வீதி மையப்பகுதியில் பல அடி ஆழத்துக்கு குழி தோண்டினர். குழாய் பதித்து, ஜங்ஷன் தொட்டிகள் அமைத்த நிலையில், இணைப்பு தராமல் இழுத்தடித்து வருகின்றனர். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இந்தப்பணி முடிந்தது. அதன் பிறகு அடுத்தக்கட்ட பணி தொடங்கவில்லை. இதனால் குழிகளில் மழை நீர் தேங்கி, டெங்கு கொசு உற்பத்தி அதிகமாகி விட்டது. வீடுகளின் கழிவுநீரும் வெளியேற வழியின்றி, துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றம், கொசுக்கடியுடன் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இப்படி இருந்தால் டெங்கு, சிக்குன் குனியா வராமல் என்ன செய்யும். இவ்வாறு மக்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X