37.கொள்கையில் வென்ற நேதாஜி

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021
Share
Advertisement
கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்தில் எங்களுக்கு துளியும் சம்மதம் இல்லை. இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, என்று சொன்ன நேதாஜியை திரும்பிப் பார்த்தார் காந்தி. சிறிது நேரம் நேதாஜியை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். ஐ.சி.எஸ் வேலையை துறந்து விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் என்று கைகளை கட்டிக்கொண்டு தன் முன்னால் பணிவுடன்
37.கொள்கையில் வென்ற நேதாஜி

கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்தில் எங்களுக்கு துளியும் சம்மதம் இல்லை. இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, என்று சொன்ன நேதாஜியை திரும்பிப் பார்த்தார் காந்தி. சிறிது நேரம் நேதாஜியை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். ஐ.சி.எஸ் வேலையை துறந்து விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் என்று கைகளை கட்டிக்கொண்டு தன் முன்னால் பணிவுடன் வந்து நின்ற இளைஞரா இது? என்று யோசித்தார்.

1929ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் பிரிட்டிஷார் இந்தியாவுக்கு குடியேற்ற நாடு அந்தஸ்து கொடுத்தால் காங்கிரஸ் மகாசபை ஒப்புக்கொள்ளும். இல்லாவிட்டால் காங்கிரஸ் பூரண சுயராஜ்யத்தை கோரி நிற்கும். இதற்கு குறைவாக எதைக் கொடுத்தாலும் ஏற்காது' என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. நேதாஜி இதையும் வன்மையாக மறுத்தார். 'தவறான கோரிக்கை இதை நிறைவேற்றுவதற்கு பிரிட்டிஷாரிடம் அனுமதி கேட்பது அதைவிடத் தவறானது. 1929 வரை அவகாசம் கேட்டது நெருடலின் உச்சம். மொத்தத்தில் காந்தியின் தீர்மானம் நேதாஜிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

கோரிக்கை... கோரிக்கை.. கோரிக்கை என்று இப்படியே காலம் தள்ளி விடத் தான் காங்கிரஸ் பார்க்கிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். எப்படியோ நேதாஜி விரும்பிய பூரண சுயராஜ்ஜியம் கேட்டு தீர்மானம் நிறைவேற்றியதில் ஓரளவு திருப்தி அடைந்தார் நேதாஜி. இந்த தீர்மானம் நேதாஜிக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை காட்டுவதாக அமைந்தது. ஆங்கிலேய அரசும் இதை கவனிக்கத் தவறவில்லை. மாநாடு முடிந்ததும் வழக்கமான பணிகள் மீண்டும் தொடங்கின.

(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார் மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X