பொது செய்தி

தமிழ்நாடு

29ல் முதல்வர் சேலம் வருகை

Added : நவ 22, 2021
Share
Advertisement
சேலம்: மறைந்த தி.மு.க., நிர்வாகி வீரபாண்டி ராஜா படத்திறப்பு, அரசு நல உதவிகள் வழங்க, முதல்வர் ஸ்டாலின், வரும், 29ல் சேலம் வர உள்ளார். அதனால், கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், நேற்று, எருமாபாளையம் பைபாஸையொட்டி உள்ள காலியிடத்தை, விழா நடத்த ஆய்வு செய்து, ஆலோசனை நடத்தினர். மாவட்டத்தில் சமீபத்தில் அமைச்சர் நேரு

சேலம்: மறைந்த தி.மு.க., நிர்வாகி வீரபாண்டி ராஜா படத்திறப்பு, அரசு நல உதவிகள் வழங்க, முதல்வர் ஸ்டாலின், வரும், 29ல் சேலம் வர உள்ளார். அதனால், கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், நேற்று, எருமாபாளையம் பைபாஸையொட்டி உள்ள காலியிடத்தை, விழா நடத்த ஆய்வு செய்து, ஆலோசனை நடத்தினர். மாவட்டத்தில் சமீபத்தில் அமைச்சர் நேரு மக்களிடம் குறைகள் கேட்டு பெறப்பட்ட, 35 ஆயிரத்து, 617 மனுக்களில் தகுதியானவற்றை தேர்வு செய்து, அதன் பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவி, அரசாணை வழங்குவார். அத்துடன், 26ல் நடக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்வோருக்கு பணி ஆணையும் வழங்குவார். இதற்காக, 29ல் தனி விமானத்தில் புறப்பட்டு சேலம் வரும் முதல்வர், காலை, 10:00 மணிக்கு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பார். மதியம், 2:00 மணிக்கு ஐந்து ரோடு திருமண மண்டபத்தில் நடக்கும் படத்திறப்பு விழாவை முடித்துக்கொண்டு, சென்னை புறப்படுவார். அதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம், கட்சியினர் இணைந்து செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X