பொது செய்தி

தமிழ்நாடு

'வேட்பாளரை பழிவாங்ககூடாது'

Added : நவ 22, 2021
Share
Advertisement
சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், வைகுந்தத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் கோபால் தலைமை வகித்தார். அதில், மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி பேசியதாவது: நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினர், நவ., 23ல்(நாளை), அந்தந்த பகுதிகளில் உள்ள பொது இடத்தில் மனுக்கள் வழங்கப்படும் என்பதால், பூர்த்தி செய்து அன்றே வழங்க வேண்டும்.

சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், வைகுந்தத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் கோபால் தலைமை வகித்தார். அதில், மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி பேசியதாவது: நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினர், நவ., 23ல்(நாளை), அந்தந்த பகுதிகளில் உள்ள பொது இடத்தில் மனுக்கள் வழங்கப்படும் என்பதால், பூர்த்தி செய்து அன்றே வழங்க வேண்டும். கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட உள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, அந்தந்த வார்டு கட்சியினருக்கு உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுப்பவர் தான் போட்டியிடுவார். உங்கள் பகுதியில் சிறு சிறு சங்கடங்கள் இருக்கலாம். அதற்காக கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை பழி வாங்க கூடாது. தியாக உணர்வோடு பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், நகர செயலர் பாஷா உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, முன்னாள் நகர உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், இந்திரா, மாவட்ட முன்னாள் துணை செயலர் ரமேஷ் உள்பட, 20க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X