பொது செய்தி

தமிழ்நாடு

அழுகிய சின்னவெங்காயம்: இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 49 ஹெக்டேரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டது. சில நாளாக பெய்த மழையால், வெங்காய தோட்டத்தில் மழைநீர் தேங்கியது. இதனால், தாழ்கள் மண்ணில் சாய்ந்து வெங்காயம் அழுகியது. மல்லூர், களரம்பட்டி, பெரமனூர், வேங்காம்பட்டி, கம்மாளப்பட்டி, சந்தியூர் உள்ளிட்ட இடங்களில், தோட்டக்கலை அலுவலர்கள், வெங்காய தோட்டங்களை ஆய்வு செய்தனர். அதில், 2.50

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 49 ஹெக்டேரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டது. சில நாளாக பெய்த மழையால், வெங்காய தோட்டத்தில் மழைநீர் தேங்கியது. இதனால், தாழ்கள் மண்ணில் சாய்ந்து வெங்காயம் அழுகியது. மல்லூர், களரம்பட்டி, பெரமனூர், வேங்காம்பட்டி, கம்மாளப்பட்டி, சந்தியூர் உள்ளிட்ட இடங்களில், தோட்டக்கலை அலுவலர்கள், வெங்காய தோட்டங்களை ஆய்வு செய்தனர். அதில், 2.50 ஹெக்டேர் பரப்பு வெங்காயம், மழையால் சேதமடைந்தது தெரிந்தது. அது குறித்த விபரத்தை அரசுக்கு அறிக்கையாக அளித்தனர். களரம்பட்டி விவசாயி ஆண்டியப்பன்,80, கூறுகையில், ''மழையால் வெங்காயம் அழுகி, ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X