இலவச மரக்கன்று வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மரக்கன்று வழங்கல்

Added : நவ 22, 2021
Share
கெங்கவல்லி: தமிழக அரசின் நீடித்த பசுமை போர்வை இயக்கம் சார்பில், வேளாண் காடுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று வழங்கி பண பலன் தரும்படி, ஒரு ஏக்கருக்கு தனி பயிராக நடவு செய்ய, 160 மரக்கன்று, வரப்பு பயிராக நட, 50 மரக்கன்று வழங்கப்படும். நான்கு ஆண்டுக்கு உயிருள்ள ஒரு கன்றுக்கு, 7 ரூபாய் வீதம் பராமரிப்பு செலவு மானியம் வழங்கப்படும்.

கெங்கவல்லி: தமிழக அரசின் நீடித்த பசுமை போர்வை இயக்கம் சார்பில், வேளாண் காடுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று வழங்கி பண பலன் தரும்படி, ஒரு ஏக்கருக்கு தனி பயிராக நடவு செய்ய, 160 மரக்கன்று, வரப்பு பயிராக நட, 50 மரக்கன்று வழங்கப்படும். நான்கு ஆண்டுக்கு உயிருள்ள ஒரு கன்றுக்கு, 7 ரூபாய் வீதம் பராமரிப்பு செலவு மானியம் வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள், உழவன் செயலிமுலம் பதிவு செய்து தேக்கு, குமிழ், மகாகனி, செம்மரம், மலை வேம்பு ஆகிய கன்றுகளை, வனத்துறை நாற்றங்காலில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என, கெங்கவல்லி வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேபோல், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்திலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X