சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஒன்றிய செயலர், மகன் மீது வழக்குப்பதிவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
தாரமங்கலம்: அ.தி.மு.க., ஒன்றிய செயலர், அவரது மகன் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றிய குழு தலைவி, பா.ம.க.,வை சேர்ந்த சுமதி. இவர், 2020 ஜூனில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் மனு: கடந்த, 2020 ஜூன், 6ல், அ.தி.மு.க.,வின் தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலராக, அமரகுந்தியை சேர்ந்த மணிமுத்து, 52, பொறுப்பேற்று, மேள தாளம், வாணவேடிக்கையுடன் சென்றார்.

தாரமங்கலம்: அ.தி.மு.க., ஒன்றிய செயலர், அவரது மகன் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றிய குழு தலைவி, பா.ம.க.,வை சேர்ந்த சுமதி. இவர், 2020 ஜூனில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் மனு: கடந்த, 2020 ஜூன், 6ல், அ.தி.மு.க.,வின் தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலராக, அமரகுந்தியை சேர்ந்த மணிமுத்து, 52, பொறுப்பேற்று, மேள தாளம், வாணவேடிக்கையுடன் சென்றார். அப்போது என் வீட்டின் முன்பிருந்த, 2,000 ரூபாய் மதிப்பிலான அலங்கார விளக்கை, மணிமுத்துவின் மகன் சந்துரு உடைத்து சேதப்படுத்தினார். அதை கேட்டதற்கு கேவலமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுதொடர்பாக, தொளசம்பட்டி போலீசார் விசாரித்து, மணிமுத்து, சந்துரு மீது, நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X