தகிக்குது தக்காளி - கிலோ ரூ.180; சாம்பார், ரசத்தில் இருந்து தக்காளி 'எஸ்கேப்'

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (49)
Advertisement
கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவால், விலை அதிகரித்து கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், ஹோட்டல்கள், வீடுகளில் சாம்பார், ரசம் போன்ற சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து உள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில்
தக்காளி விலை, உயர்வு, உச்சம்,

கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவால், விலை அதிகரித்து கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், ஹோட்டல்கள், வீடுகளில் சாம்பார், ரசம் போன்ற சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து உள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக, காய்கறி வரத்து குறைந்து, 3,000 டன் காய்கறிகள் மட்டுமே வந்தன. மழை ஓய்ந்தாலும், விலை குறைந்தபாடில்லை. சமையலுக்கு முக்கியமாக தேவைப்படும் காய்கறிகளில் ஒன்றான தக்காளியின் விலையை கேட்டாலே மக்கள் தகித்துப்போயுள்ளனர். நேற்று (நவ.,21) ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120 -140 என விற்பனையான நிலையில் இன்று ரூ.180 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


இவ்வளவு விலை கொடுத்து வாங்கி சமைத்தால் ஹோட்டல்களில் கட்டுப்படியாகாது என எண்ணிவிடவும் வாய்ப்புள்ளது. ஹோட்டல் மட்டுமல்லாமல் பல வீடுகளிலும் தக்காளி இல்லாமல், சாம்பார், ரசம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தளவிற்கு தக்காளி மிகவும் காஸ்ட்லியான காய்கறியாகியுள்ளது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
23-நவ-202115:00:24 IST Report Abuse
Ramaswami Sampath மணத்தக்காளி சாப்பிடுங்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-நவ-202105:18:03 IST Report Abuse
J.V. Iyer வீட்டில் ஒரு மண்செட்டியில் தக்காளி செடியை வளருங்கள். ஒவ்வொரு செடியிலிருந்தும் இருவது முதல் முப்பது தக்காளி பழம் பெறலாம். இதுபோன்ற மற்ற காய்கறிகளையும் செடியில் பயிரிடலாம். முயற்சி செய்தால் முடியாதது எது?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
23-நவ-202113:56:42 IST Report Abuse
Visu Iyerஆஹா.. ஐடியா.. (வை சொல்லி கொடுக்காதீங்க) இனி மண் தொட்டிக்கு ஜிஎஸ் டி வரி வரும்.....
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
22-நவ-202123:35:16 IST Report Abuse
Soumya கொத்தடிமைங்களா விடியலூ எதிர்கட்சியா இருந்தப்ப ஊளையிட்டானே இப்ப எங்கடா பம்மிட்டு இருக்கீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X