போபால்: போபாலில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கியும் 2 ஆண்டுகளாக சீரமைக்காமல் குண்டு குழியுமாக மாறியதை அடுத்து, சாலையை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் நடத்தி வினோதமான முறையில் 'சிரிப்பு போராட்டம்' நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அரவிந்த் நகர் பகுதியில் 200 மீட்டர் நீள சாலை, மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக மாநில அரசு சார்பில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சாலை சீரமைப்பு பணிகளும் துவங்கியுள்ளது. ஆனால், சில நாட்களில் பணிகள் நிறுத்தப்பட்டதால், சாலை குண்டும் குழியுமாக மாறி மோசமடைந்தது.

சேதமடைந்த சாலையை இதுவரையில் சீரமைக்காததால், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும், அப்பகுதி மக்கள் வித்தியாசமான முறையில் போராட முடிவு செய்துள்ளனர். சேதமடைந்த சாலை அருகே அப்பகுதி மக்கள் வரிசையாக நின்றுக்கொண்டு, வயிறு குலுங்க சிரித்து 'சிரிப்பு போராட்டம்' நடத்தியுள்ளனர்.