எங்கும் பனி மழை பொழிகிறது குல்மார்க் அழைக்கிறது

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | |
Advertisement
பொதுவாக கோடை காலத்தில்தான் சுற்றுலா பயணியர் மலை வாசஸ்தலமான ஊட்டி,கொடைக்கானல்,ஏற்காடு,சிம்லா போன்ற இடங்களுக்கு செல்வர் ஆனால் ஆச்சரியமாக குளிர்காலத்தில் ஒரு இடத்திற்கு அதிகம் சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்கின்றனர் என்றால் அது குல்மார்க் என்ற இடமாகத்தான் இருக்கும்.இந்தியாவின் மிக மிக அழகான மலை வாசஸ்தலமான குல்மார்க்,காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாlatest tamil news


பொதுவாக கோடை காலத்தில்தான் சுற்றுலா பயணியர் மலை வாசஸ்தலமான ஊட்டி,கொடைக்கானல்,ஏற்காடு,சிம்லா போன்ற இடங்களுக்கு செல்வர் ஆனால் ஆச்சரியமாக குளிர்காலத்தில் ஒரு இடத்திற்கு அதிகம் சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்கின்றனர் என்றால் அது குல்மார்க் என்ற இடமாகத்தான் இருக்கும்.


latest tamil news


இந்தியாவின் மிக மிக அழகான மலை வாசஸ்தலமான குல்மார்க்,காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2730 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.பனிப்பொழிவு என்பது இங்குதான் மிதமாக ஆரம்பித்து இரண்டு மூன்று மாதங்களுக்கு இதமாக தொடர்வது குல்மார்க்கின் சிறப்பு.இதுவே சுற்றுலா பயணியருக்கு அழைப்பு.இதன் காரணமாக இங்கு மட்டுமே 1927 ம் ஆண்டு முதல் ஸ்கீயிங் எனப்படும் குளிர்காலத்தில் மட்டுமே விளையாடக்கூடிய பனிச்சறுக்கு விளயைாட்டு நடைபெறுகிறது இதைப் பார்க்கவும் பங்கேற்கவும் உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர்.


latest tamil news


Advertisement

அழகிய ஏரிகள்,அடர்ந்த பைன் மரக்காடுகள்,எழில் நிறைந்த நிலக்காட்சிகள்,பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டங்கள்,நீண்ட கேபிள் கார் பயணம்,ட்ரெக்கிங் எனப்படும் சாகச மலையேற்றம் என்று சுற்றுலா பயணியரை கவரும் எல்லா அம்சங்களும் இங்கு கூடுதலாக உள்ளன.


latest tamil news


குல்மார்க் என்றால் மலர்வனம் என்று பெயர்,பெயருக்கு ஏற்ப திரும்பி பக்கம் எல்லாம் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணப்படும் பசுமை, அமைதியான சூழல் ஆகியவை இவ்விடத்தை ஒரு அற்புதமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன. நிங்கல் நல்லா, வேரிநாக், ஃபெரோஸ்பூர் நல்லா ஆகியவை இப்பகுதியில் ஓடும் நீரோடைகளில் சில. வேரிநாக் நீரோடையின் தெள்ளத் தெளிவான தூய்மையான நீர் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என நம்பப்படுவதால் அதன் காரணமாகவும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.


latest tamil news


இங்கு வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகள், இவ்விடத்தின் கண்கவரும் இயற்கை எழிலை கண்டு இன்புறுவதோடு, ஏரிகளில் மீன்பிடித்தும் மகிழ்கின்றனர்.குல்மார்க்கிலுள்ள லியன் மார்க் என்னும் இடமும் இயற்கை எழிலுக்கு பெயர் பெற்ற இடமாகும். அடர்ந்த பைன் மரக் காடுகளும், காட்டு மலர்களும் இந்த இடத்தைவிட்டு பயணிகளை நகரவிடாமல் தங்கி மகிழவைக்கிறது.


latest tamil news


குல்மார்க்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்பாதர் ஏரியும் காணத்தக்க ஒரு இடமாகும். இந்த ஏரியின் சிறப்பம்சம் என்னவெனில், ஆண்டு முழுவதும் ஜூன் மாத மத்தி வரையிலும் இதிலுள்ள நீர் உறைந்திருக்கும். கோடைகாலத்தில் நீர் உருக ஆரம்பித்து, பள்ளத்தாக்கினூடே பனிக்கட்டிகளைத்தாங்கிய நீரோடையாக ஓட ஆரம்பிக்கும். பனிபடர்ந்த வெள்ளிப்பனிமலைகள் பின்புலத்தில் அமைந்து இப்பகுதியை எழில்மிக்க சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.
கேபிள் கார் போன்ற இயக்கமுறைகொண்ட கோண்டோலா பயணமும் குல்மார்க்கிலுள்ள மற்றொரு கவர்ச்சியான அம்சமாகும். 5 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய இரண்டு தடங்களை சுற்றுலாப்பயணிகள் தேர்ந்தெடுக்கலாம். குல்மார்க்கிலிருந்து காங்க்டூர் வரை ஒன்றும் காங்க்டூரிலிருந்து அபர்வத் வரை ஒன்றுமாக இரண்டு தடங்களில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலாவிலிருந்து இமயமலைச் சிகரங்களையும், கோண்டோலா கிராமத்தையும் கண்டு ரசிப்பது த்ரில்லான அனுபவமாக இருக்கும்.
பஞ்சுப்பொதி போல நம் தலைக்கு மேலே கடந்து செல்லும் மேகக்கூட்டங்களும் அது உதிர்த்துவிட்டு சென்றதோ என எண்ணும்படி பார்க்கும் இடமெல்லாம் படர்ந்திருக்கும் பனிப்பொழிவும் குல்மார்க்கின் சிறப்பு.
கொரோனாவிற்கு முதல் பலியானது சுற்றுலாதான் தற்போது முழுமையாக மீண்டு வருவதும் சுற்றுலாதான் என்பதற்கு அடையாளமாக குல்மார்க் வரும் சுற்றுலா பயணியரை வரவேற்க அனைத்து துறையினரும் ஆவலுடன் புத்துணர்வோடு காத்திருக்கின்றனர்.
-எல்.முருகராஜ்.Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X