பொது செய்தி

தமிழ்நாடு

கோவை அரசு விழாவில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசை; பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு மேடையில் இடம்

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கோவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க., உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் விழாவை புறக்கணித்த நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மட்டும் விழாவில் பங்கேற்றார். அவரை மேடைக்கு அழைத்து இருக்கை வழங்கினர்.கோவையில் பல்வேறு நலத்திட்ட
Coimbatore, MLAs, Chair, Vanathi Srinivasan, BJP MLA, Semmozhi Poonga, TamilnaduCM, Stalin, கோவை, செம்மொழி பூங்கா, தமிழகம், முதல்வர், ஸ்டாலின்

கோவை: கோவை மாவட்டத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கோவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க., உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் விழாவை புறக்கணித்த நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மட்டும் விழாவில் பங்கேற்றார். அவரை மேடைக்கு அழைத்து இருக்கை வழங்கினர்.

கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இது அரசு விழா என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை. ஓட்டுப்போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்காவும் பணியாற்றுவோம் என முன்பே கூறியிருந்தேன். அந்த அடிப்படையில் கோவை மக்களுக்கு பல நலத்திட்டங்கள் செய்து வருகிறோம். அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள் தான் என்ற உணர்வோடு பணியாற்றுகிறோம்.


latest tamil news


தி.மு.க.,வை பொறுத்தவரை மனு கொடுத்தால், அது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். நிறைவேற்ற முடியாத கோரிக்கையாக இருந்தாலும் மனு கொடுத்தவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு இந்த தி.மு.க., அரசு ரூ.1,131 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சென்னையை போன்று கோவைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். சென்னை மாநகர பகுதி போன்றே கோவை மாநகரிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தில் ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். ரூ.309 கோடியில் வெள்ளக்கிணறு, சின்ன வேடம்பட்டியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு இருக்கை


latest tamil news


கோவை, வ.உ.சி., அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் அ.தி.மு.க., கொறடா எஸ்.பி.வேலுமணி, பா.ஜ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 10 எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும், மேடைக்கு எதிரே முன்வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது. ஆனால், விழாவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்த நிலையில் விழாவுக்கு வந்திருந்த பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனை மேடையில் வந்து அமருமாறு முதல்வர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து வானதி சீனிவாசன் மேடையில் அமர்ந்து விழாவில் கலந்து கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
22-நவ-202123:36:06 IST Report Abuse
அன்பு எப்போதாவது ஜெயலலிதா அல்லது கலைஞர் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கூப்பிட்டு ஆளும் கட்சி விழா மேடையில் அமர்த்தியது உண்டா? சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், செய்வதற்கு மனசு வேண்டும் சார். நல்ல செயல்களுக்கு கூட ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டிருந்தால், எல்லோரும் கெட்டவர்களாகவே தெரிவார்கள்.
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
22-நவ-202123:26:33 IST Report Abuse
Ram CM அவர்கள் பெண்களுக்கு மரியாதை தருவதை பல சம்பவங்களில் பார்க்க முடிகிறது பெண்களுக்கு இலவச பஸ் பாஸ்.. மற்றும் எண்ணற்ற என்னும் 5 ஆண்டுக்கலில் என்னும் பல நல்ல செயல்பாடுகளை முதல்வரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
22-நவ-202121:31:09 IST Report Abuse
Sathyanarayanan Subramanian ஓட்டு போடாதவர்களுக்கும் விடியல் அரசு பணியாற்றுவாம். கேட்பதற்கு நல்லாருக்கு. ஆனால் நடைமுறையில்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X