பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா நிலத்தில் மழைநீர் செல்ல வாய்க்கால் எடுக்க மக்கள் எதிர்ப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் ஏ.பள்ளிப்பட்டி பஞ்.,ல் ஏழு கிராமங்கள் உள்ளன. இங்கு கல்வராயன் மலை தொடரிலிருந்து வரும் மழைநீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. இது, நான்கு பஞ்.,க்களின் வழியாக செல்லும்போது, 20 ஆயிரம் விவசாயிகள் பயனடைகின்றனர். தற்போது ஏ.பள்ளிப்பட்டி பஞ்., விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரம் மேம்பட அங்குள்ள பெரியஏரி, சின்னஏரிக்கு, பெரும்பள்ளம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் ஏ.பள்ளிப்பட்டி பஞ்.,ல் ஏழு கிராமங்கள் உள்ளன. இங்கு கல்வராயன் மலை தொடரிலிருந்து வரும் மழைநீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. இது, நான்கு பஞ்.,க்களின் வழியாக செல்லும்போது, 20 ஆயிரம் விவசாயிகள் பயனடைகின்றனர். தற்போது ஏ.பள்ளிப்பட்டி பஞ்., விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரம் மேம்பட அங்குள்ள பெரியஏரி, சின்னஏரிக்கு, பெரும்பள்ளம் தடுப்பணையில் தேங்கும் நீரை கொண்டு செல்ல கோரிக்கை வைத்தனர். இதன்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து சின்னஏரி, பெரியஏரி தண்ணீர் கொண்டு வர, 200 மீ., அளவிற்கு மட்டுமே அரசு புறம்போக்கு நீர்வழி பாதை உள்ளது. இதையறிந்தும், பொதுபணித்துறையினரின் தவறான நடவடிக்கையால் அப்பகுதியில் விவசாயம் செய்யும் மலைவாழ் மக்களின் விவசாய நிலங்கள் வழியாக, அந்த ஏரிக்கு தண்ணீர் எடுத்து வர முயற்சி செய்தனர். இதற்கு ஐந்து பஞ்., மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியை கை விட்டு விட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X